பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்! உறுதி எடுத்த சிவசேனா கட்சி கூட்டணி எம்.எல்.ஏக்கள்!!

பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்! உறுதி எடுத்த சிவசேனா கட்சி கூட்டணி எம்.எல்.ஏக்கள்!! 1

மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ.க கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில், மும்பை ஹயாத் ஹோட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

விளம்பரம்

அந்த உறுதி மொழியில், ‘நான் என்னுடைய கட்சிக்கு உண்மையாக இருப்பேன் எனவும் அதிலிருந்து என்னைக் கொண்டுவர முடியாது என்றும் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்க மாட்டேன். கட்சி விரோத நடவடிக்கைகளில் எதிலும் ஈடுபடமாட்டேன்’ என்றும் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய சரத் பவார், ‘எங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்க முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 162-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களைக் கொண்டுவருவது சாத்தியம். இது கோவா அல்ல. மகாராஷ்டிரா. பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு எந்த எம்.எல்.ஏக்களும் விடுமுறை ஆகாமல் கொண்டுவருவது என்னுடைய தனிப்பட்ட பொறுப்பு’ என்று அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமெனில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்! நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு!!

அவரைத்தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, ‘எங்களுடைய பலத்தை கேமராவில் காட்சிப்படுத்த முடியாது. நாங்கள் இங்கே வந்துள்ளோம். எங்கள் பாதை தெளிவாக உள்ளது. சிவசேனா என்றால் யாரென்று தெரியவில்லையென்றால், எங்களுடைய பாதையைத் தாண்டிப் பாருங்கள். நாங்கள் யாரென்று உங்களுக்கு காட்டுகிறோம். நாங்கள் வெறும் ஐந்து ஆண்டுகளாக மட்டும் இங்கே இல்லை’ என்று தெரிவித்தார்.

விளம்பரம்

Leave a Comment