ஒரு தமிழ் பொண்ணு அவமானப்பட்டு நிக்கிறேன்.! கதறி அழுத நடிகை விஜயலக்ஷ்மி.!

வெளியிட்டது

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தற்போது நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் இணைந்து புகார் ஒன்றை அளித்து இருக்கின்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி தான் காசுக்காக இது போல் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள., ஒரு தமிழ் பெண் அவமானப்பட்டு நிற்கிறேன், நிறைய முறை செத்து விடலாம் என்று நினைத்திருக்கிறேன். தற்கொலை முயற்சியும் மேற்கொண்டு இருக்கிறேன். ஆனால் வீரலட்சுமி தனக்கு முழு ஆதரவாக இருக்கிறார். சீமானை உறுதியாக கைது செய்ய வைப்போம். திமுக அரசு சீமானை கண்டிப்பாக கைது செய்யும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக பேசினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தமிழ் பொண்ணு அவமானப்பட்டு நிக்கிறேன்.! கதறி அழுத நடிகை விஜயலக்ஷ்மி.! 1

கடந்த அதிமுக ஆட்சியில் சீமான் மீது பலமுறை புகார் அளித்தும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என் மீது தான் விசாரணை நடத்தினார்கள். சீமான் மீது அதிமுகவினர் ஏன் வழக்கு நடத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். கயல்விழி உடன் திருமணம் ஆகாத போது அவருடன் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தன்னை பொண்டாட்டி என்று அழைக்கும் வீடியோக்களையும் நான் வெளியிட்டு இருக்கிறேன் என்று பேசினார். பின்னர் பேசிய தமிழர் முன்னேற்ற படையின் வீரலட்சுமி, விஜயலட்சுமியை மனைவியாகவும் கயல்விழியை துணைவியாக வைத்துக்கொண்டு வாழ்வேன் என்று சீமான் உறுதி அளித்ததாக கூறினார். எனவே தான் சீமான் மீது எந்த நடவடிக்கையும் விஜயலட்சுமி எடுக்காமல் விட்டுவிட்டார்.

ஆனால் தற்போது விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியினர் போன் செய்து திட்டுகின்றனர். ஒருமுறை விஜயலட்சுமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று கொண்டு அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொள்ள முயற்சித்த போது சீமான் தான் ஒரு பெரியாரிஸ்ட் என்றும், தான் ஒரு கிறிஸ்தவர் என்பதாலும் தன்னால் இந்த மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொள்வதில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி தவித்து விட்டதாக கூறினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்