நடிகை ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழிந்த நிலையில், தற்போது அவர்களின் திருமணத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆதியை பொருத்தவரை மிகக் குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும் அனைத்து படங்களும் வெற்றி படங்களாகவே இருந்தன. கட்டுக்கோப்பான உடலும், நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஆதி. இவர் மற்றவர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பார். இவர் முதன் முதலில் மிருகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் அரவாண் ஆகும். அதற்கு பின்னர் ஈரம், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரகத நாணயம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. நிக்கி கல்ராணியை பொருத்தவரை டார்லிங் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார் .இவர் கவர்ச்சியாக நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் மரகத நாணயம் படத்தில் ஆதியுடன் நடித்துக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இருவருமே இதை பொதுவெளியில் கூறாமலே இருந்து வந்தனர். இருவரும் டேட்டிங் செல்வது, அவுட்டிங் செல்வது என்று தங்களது காதலை ரகசியமாகவே வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒருநாள் திடீரென ஆதிக்கும், நிக்கி கல்ராணிக்கும் நிச்சயம் முடிந்து விட்டது என தகவல் பரவியது. அப்போது அவர்களே தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்தனர்.
பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் சங்கீத், நலங்கு ய, ஹால்தி பங்க்ஷன் என மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது. பல முன்னணி நடிகர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில் ஆதியும் நிக்கி கல்ராணியும் திருமணம் ஆகி 3 மாதங்கள் கழித்து தங்களின் திருமண வீடியோவின் டீசரை வெளியிட்டுள்ளனர். அதில் நிக்கி கல்ராணி ஏற்கனவே மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதை நேற்று போல் உணர்கிறேன். எங்கள் திருமண நாள் எப்படி இருந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்கவும். என்று அவர் பதிவிட்டுள்ளார் நீங்களும் அந்த வீடியோவை காண… Watch the below Video..
YouTube Video Code Embed Credits: Nikki Galrani Pinishetty