இனிமே சின்னத்திரை நயன்தாரா இவங்கதான்..நயன் போலவே உடை அணிந்து போட்டோ போட்ட சின்னத்திரை நடிகை

தமிழ் உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர் இயக்குனர் விக்னேஷ் இவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அவர் சிகப்பு நிற உடையில் இருந்தார். இவரின் உடைகள் ஆடை வடிவமைக்கும் ஒரு குழுமத்தால் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களின் கட்டிடங்கள், சின்னங்கள் என்று மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் நயன்தாரா அணிந்திருந்த நகைகள் மற்றும் அதிலிருந்த கற்கள் எல்லாமே விலை உயர்ந்ததாக இருந்தது.

இனிமே சின்னத்திரை நயன்தாரா இவங்கதான்..நயன் போலவே உடை அணிந்து போட்டோ போட்ட சின்னத்திரை நடிகை 1

விளம்பரம்

இதைப் பார்த்து பலரும் நயன்தாராவின் உடையை போலவே வடிவமைத்து பயன்படுத்தி போட்டோ சூட் நடத்தி வந்தனர். இந்த நிலையில் விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் காமெடி நடிகை ஆர்த்தியும் நயன்தாரா போலவே உடை அணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் காமெடியில் கலக்கி வருபவர் நடிகை ஆர்த்தி. இவர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் நடனமாடி கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆர்த்தியும் அவரது கணவர் கணேசும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடையவை  சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா? - மீண்டும் ஹரி - சூர்யா இணைகிறார்கள்!!

இனிமே சின்னத்திரை நயன்தாரா இவங்கதான்..நயன் போலவே உடை அணிந்து போட்டோ போட்ட சின்னத்திரை நடிகை 3

விளம்பரம்

அந்த நிகழ்ச்சியின் போது நடிகை ஆர்த்தி நயன்தாராவின் திருமண உடை போன்ற ஒரு உடையை அணிந்து இருக்கிறார். அதை ஆர்த்தியே instagram பக்கத்தில் பதிவிட்டு என்ன கொடுமை சார் என்றும் எக்ஸ்பெக்டேஷன் வெர்சஸ் ரியாலிட்டி என்றும் ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார். தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆகா கல்யாணம் என்ற போட்டி நடந்து வருகிறது. இதற்காக அனைவரும் திருமண கோலத்தில் தங்களை தயார் படுத்தி ஆடி வருகின்றனர். இந்த நிலையில் ஆர்த்தி நயன்தாராவின் திருமண கோலத்தை போன்றே புகைப்படம் பதிவிட்டு இருப்பது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இனிமே சின்னத்திரை நயன்தாரா இவங்கதான்..நயன் போலவே உடை அணிந்து போட்டோ போட்ட சின்னத்திரை நடிகை 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment