ADHIGAARAM Motion Teaser! Raghava Lawrence | Vetrimaaran | Durai senthil kumar

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி இன்று ஹீரோவாகவும் , இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பல ரசிகர்களை கவர்ந்த கதாநாயகனாக இருக்கவர் ராகவா லாரன்ஸ். இவர் எடுத்த காஞ்சனா திரைப்படங்கள் மூலம் பேமிலி ஆடியன்ஸ் ஹீரோவாக மாறினார் லாரன்ஸ். இவர் இறுதியாக நடித்து இயக்கிய திரைப்படம் காஞ்சனா 3.

ADHIGAARAM Motion Teaser! Raghava Lawrence | Vetrimaaran | Durai senthil kumar 1

இந்த திரைப்படம் குழந்தைகளை அதிகமாக கவர்ந்தது என்றே கூறலாம். இதை தொடர்ந்து தற்போது லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படமான அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் எழுதி தயாரிக்க துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் இயக்கிய அணைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதை த்தொடர்ந்து இந்த படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் வெற்றிமாறன். துரை செந்தில்குமார் எதிர் நீச்சல் , காக்கி சட்டை , கோடி , பட்டாசு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு வெற்றி இயக்குனர்கள் இனைந்து பணியாற்றும் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. தற்போது இந்த அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்