Categories: சினிமா

மணி சார் எப்படி இந்த தேவதையை மிஸ் பண்ணீங்க? ராணி போல போட்டோஷூட் நடத்திய அதிதி

வெளியிட்டது

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தற்போது ராணி மாதிரி நகைகள் மற்றும் உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளது வைரலாகி வருகிறது.

மணி சார் எப்படி இந்த தேவதையை மிஸ் பண்ணீங்க? ராணி போல போட்டோஷூட் நடத்திய அதிதி 1

இயக்கனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. இளைய மகள் அதிதி தற்போது திரைத்துறையில் நடிகை மற்றும் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

1997ம் ஆண்டு பிறந்த அதிதி, ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்றார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஆனாலும் மருத்துவ துறையிலிருந்து திரைத்துறைக்கு மாறியுள்ளார்.

தனது முதல் படமாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மதுர வீரன் என்னும் பாடலையும் பாடியுள்ளார்.

முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அடுத்தப் படமாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதாக அதிதி மீது விமர்சனங்கள் எழுந்தன. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அதிதி தொடர்ந்து இயங்கி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்து இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அதிதி தொடர்ந்து போட்டோஷூட்டுகளை நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சிவப்பு நிற உடையில் மகாராணி போல நகைகள் அணிந்து அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் சமூக வரைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த அவரது ரசிகர்கள் பேசாமல் அதிதியை பொன்னயின் செல்வனில் நடிக்க வைத்து இருக்கலாம் என்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்