விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து கமல்ஹாசன் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இது வசதிகளைப் பொறுத்து 60 லட்சம் தொடங்கி 2.5 கோடி வரை விற்பனை செய்யப்படும் உயர் ரக சொகுசு கார்கள் ஆகும். நான்கு வருடங்களுக்கு பின்பு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் படம்.

இந்த படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து இருந்தது. ஜூன் 3ம் தேதி வெளியான இந்த படம் ஐந்தே நாட்களில் இந்தியா முழுவதும் 250 கோடி வசூலை அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மனம் மகிழ்ந்து போய் பரிசுகளை வாரி வழங்கி வருகிறார் கமல்.

அதன்படி படத்தில் பணி புரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கும் அப்பாச்சி உயர்ரக பைக்குகளை பரிசாக வழங்கினார். இன்று க்ளைமாக்ஸ்ஸில் சில நிமிடங்களே தோன்றிய போதும் அரங்கை அதிரவிட்ட சூர்யாவை நேரில் சென்று ரோலக்ஸ் உயர் ரக வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார் கமல். இதி தேதி மற்றும் கிழமை காட்டும் Day 40 வகை வாட்ச் ஆகும். இதன் உண்மையான மதிப்பு 46 லட்சம் என்று கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் நெல்சனை மரணமாக கலாய்த்து வருகின்றனர். தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன். பல லாஜிக் ஓட்டைகள், மால் ஹைஜேக், பழைய கதை என்று படம் பயங்கர தோல்வியை சந்தித்தது. இதனால் நெல்சன் மீது பயங்கர கடுப்பில் இருந்தனர் விஜய் ரசிகர்கள்.
#Nelson come baby #Vikram pic.twitter.com/p4a0IMpVEy
— Mohamed Rizan (@MOHAMEDRIZAN073) June 3, 2022
தற்போது விக்ரம் படம் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் கடுமையான மீம்ஸ்களால் வறுத்து எடுக்கப்பட்டார் நெல்சன். போதா குறைக்கு இன்றைக்கு லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு வாட்சும், உதவி இயக்குனர்களுக்கு பைக்கும் வாங்கி கொடுத்த பின் நெட்டிசன்கள் அவரை மரணமாக கலாய்த்து வருகின்றனர். ஒரு மீமில் விஜய் அண்ணன் தற்போது நெல்சனுக்கு ஏரோபிளேன் வாங்கி கொடுத்து சிறப்பு செய்வார் என்றும், விக்ரம் படம் வெற்றி பெற்றால் என்ன ஏன்டா போட்டு அடிக்குறீங்க என்று நெல்சன் சொல்வது போன்ற மீம்ஸ்-ம் பறக்க விட்டு வருகின்றனர்.

மேலும் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது இசை. இதனால் இசையமைப்பாளர் அனிருத்துக்கு கமல் என்ன செய்வார் என்று காமெடியாக ஒரு மீம் போட்டுள்ளனர். அதில் அனிருத்துக்கும், ஜோனிடா காந்திக்கும் கமல் திருமணம் செய்து வைப்பது போல் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
