நடிகை அதிதி சங்கர் அதற்குள் விளம்பர படங்களில் நடித்த தொடங்கி விட்டார். இயக்குனர் சங்கரின் இளைய மகளாக இருப்பவர் அதிதி. இவர் மருத்துவராக இருந்த போதிலும் திரை துறையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். முதல் படமே நடிகர் கார்த்திக் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதிதியின் வருகையை பலரும் விமர்சித்தனர். ஷங்கரின் மகள் என்பதாலேயே இவர் எளிதில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். அதுவும் எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்று இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து பேசி இருந்த அதிதி, சங்கர் மகள் என்பதாலேயே எனக்கு படங்களை நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. திறமை இருக்க வேண்டும். ஒரு படத்தில் நன்றாக நடிக்கவில்லை என்றால் அடுத்தடுத்த படத்தில் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். எனவே ஷங்கரின் மகள் என்ற முறையில், தான் திரைத்துறைக்கு வந்திருந்த போதிலும் என்னுடைய அடுத்த படங்களில் நடிப்பதும், நடிக்காததும் மக்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் ரசிக்கவில்லை என்றால் தன்னால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக முடியாது என்று பதில் அளித்து இருந்தார்.
இந்ம நிலையில் அவர் தற்போது விளம்பர படங்களில் நடித்த தொடங்கி இருக்கிறார். ராதிகா சரத்குமார் உடன் இணைந்து ஒரு துணி விளம்பர கடைக்கு விளம்பரத்தில் அவர் நடித்திருக்கிறார். தீபாவளி நெருங்கி விட்டதால் துணை விற்பனை கடைகள் முன்னணி நடிகைகளை வைத்து விளம்பரங்களை செய்யும். தற்போது அதிதிக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த விளம்பரத்தை நீங்களும் பாருங்கள்..
Youtube Video Code Embed Credits: The Chennai Silks