சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் 2nd Single ஜெஸ்ஸிகா பாடல் வெளியானது..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்திலிருந்து தற்போது இரண்டாவது சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் ஜெசிக்கா என்னும் பெயரில் தற்போது வெளியாகி இருக்கிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறிவிட்டார். 2012 ஆம் ஆண்டு மெரினா என்னும் படத்தில் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கி தற்போது 20 படங்களுக்கும் மேலாக நடித்த முடித்து விட்டார். இவர் கடைசியாக நடித்த படம் டாக்டர் மற்றும் டான். இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து இருந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது 3 படங்களை கைவசம் வைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் 2nd Single ஜெஸ்ஸிகா பாடல் வெளியானது..! 1

விளம்பரம்

தற்போது பிரின்ஸ், அயலான், மாவீரன் என்ற மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிரின்ஸ் படத்தில் கதாநாயகியாக வெளிநாட்டு நாயகி மரியா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். இதன் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 31 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் படத்தின் வெளியிட்டு தள்ளிக்கொண்டே போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று நேற்று ஒரு சிறிய வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

தொடர்புடையவை  திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் 2nd Single ஜெஸ்ஸிகா பாடல் வெளியானது..! 3

விளம்பரம்

தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகள் கிடைத்து வருகின்றன. முதல் சிங்கிள் பிம்பிலக்கி பிளாப்பி என்ற பாடல் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது அடுத்த சிங்கிளாக ஜெசிக்கா என்ற பாடலும் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த பாடலை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Aditya Music Tamil

விளம்பரம்

Leave a Comment