நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. முதல் படத்திலேயே சிறந்த நடிப்பு மற்றும் நடனத்தையும் வெளிப்படுத்தி மக்கள் மனங்களை கொள்ளை அடித்திருக்கிறார் அதிதி. மேலும் இந்த படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். முதல் படத்திலேயே நல்ல பெயரை பெற்று விட்டார் என்றும் அவரை பலரும் புகழ்ந்து வருகின்றனர். அதிதி அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் வரவேற்பு பாடலில் பரதநாட்டியம் நடனமாடியும் இருந்தார். ஷங்கரின் மகள் என்பதாலேயே இவ்வளவு சலுகை என்று அதிதி மீது விமர்சனங்களை எழுப்பியது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தற்போது ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.

அதிதியின் பெயர் பிரபலமானது முதலே அவர் அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கின்றன. மீசைய முறுக்கு படத்தின் கதாநாயகி ஆத்மிகா சிலருக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகிறது, ஏணியில் ஏறி சுலபமாக மேலே வந்து விடுகிறார்கள் என்று மறைமுகமாக அதிதியை விமர்சித்து இருந்தார். சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பாடியிருந்த மதுர வீரன் பாடலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியும் ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதிதி பாடியதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். பின்பு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல முன்னணி நடிகர்கள் இருக்க எதற்கு அதிதியை ஆட வைத்தார்கள்? ஷங்கரின் மகள் என்பதற்காக இவ்வளவு சலுகை காட்டப்படுகிறதா? என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்து இருந்தார். ஒரு தமிழ் முகம் தேவைப்பட்டது, மேலும் பரதநாட்டியத்தில் அதிதி சிறப்பாக இருந்ததால் அவரை தேர்வு செய்ததாக விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்து இருந்தார்.
இவ்வாறு தன்னைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் அதிதியே தற்போது விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் இயக்குனர் சங்கரின் மகள் என்பதாலேயே எனக்கு யாரும் வாய்ப்புகள் கொடுத்து விடவில்லை. எனக்கு முதல் பட வாய்ப்பு வேண்டுமானால் என் அப்பாவால் கிடைத்திருக்கலாம், ஆனால் திறமை வேண்டும், திறமை இருந்தால்தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கொடுப்பார்கள், ரசிகர்களும் அப்போதுதான் ரசிப்பார்கள், ரசிகர்கள் ரசிக்காவிட்டால் அந்த வாய்ப்பு கிடைக்காது. அப்படி ரசிகர்கள் ஆதரிக்கவில்லை என்றால் இந்த துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமை தான் கை கொடுக்கும் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.