படம் வெளியான 30வது நிமிடத்தில்.! அருண் விஜயை அலறவிட்ட real தமிழ் ராக்கர்ஸ்..என்ன நடந்தது?

சமீப காலமாக தமிழ் திரையுலகினர் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் விநியோகஸ்தர்கள் என்று அனைவரையும் அலற விட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தான் தமிழ் ராக்கர்ஸ். மிகவும் கஷ்டப்பட்டு பல கோடி செலவழித்து ஒரு படத்தை எடுத்து திரையில் வெளியிட்டால், வெளியான அரை மணி நேரத்தில் அதை போனில் அல்லது கேமராவிலோ முழுதாக படம் பிடித்து இணையதளத்தில் பரவ விடும் ஒரு கூட்டமே தமிழ் ராக்கர்ஸ் ஆகும். இந்த பெயரை கேட்டாலே பல தயாரிப்பாளர்களும் பயந்து நடுங்குவார்கள். இவர்கள் இது போன்று மடத்தை கசிய விடுவதால் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் வரை பொறுத்து இருந்து அதை பதிவிறக்கம் செய்து பார்க்கும் பழக்கம் பலரிடம் அதிகமாகி விட்டது. ஆனால் இன்றுவரை இந்த தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்? எத்தனை பேர்? குழுவாக இயங்குகிறார்களா? அல்லது தனியாக இயங்குகிறார்களா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

தமிழ் ராக்கர்ஸ்

விளம்பரம்

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு முறைகேடாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து வெளியிடுகின்றனர் என்றும், அதனால் தயாரிப்பாளர்களின் இழப்புகள் பற்றியும், அந்த குற்றத்தை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பது பற்றியும் அருண் விஜய் நடிப்பில் நேற்று ஓடிடி தளத்தில் நேற்று வெளியான படம் தான் ‘தமிழ் ராக்கர்ஸ்’. இந்த படத்தை ஈரம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கி இருந்தார். இதில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த தொடர் நேரடியாக திரையரங்குகளில் வெளியிடாமல் சோனி லைவ் தளத்தில் வெளியானது. வெகு நாட்களுக்குப் பிறகு ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. சிறிது காலமாக தயாரிப்பு எதுவும் இல்லாமல் இருந்த ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ், தமிழ் ராக்கர்ஸ் படத்தை தயாரித்ததன் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறது.

தொடர்புடையவை  குண்டா இருந்தப்பவும் கலாய்ச்சாங்க..இப்போ ஒல்லியான அப்புறமும் கலாய்குறாங்க !!முதல் முறை பேட்டி அளித்துள்ள குஷ்பூவின் மகள் அனந்திதா சுந்தர்!!

தமிழ் ராக்கர்ஸ்

விளம்பரம்

ஆனால் தமிழ்ராக்கர்ஸ் படம் வெளியான 30 நிமிடங்களுக்குள் உண்மையான தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரைத்துறையினருக்கு சவாலாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் பற்றி போலீசில் புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தமிழ் ராக்கர்ஸ் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். ஆனால் அந்த குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் படம் வெளியான 30 நிமிடங்களில் தனது இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் டீம். தங்களை விமர்சிக்கும் படத்தை அவர்களே வெளியிட்டு கவனத்தை திருப்பியுள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment