நடிகர் கார்த்தியுடன் அதிதி கபடி விளையாடி இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் தான் விருமன். இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் கார்த்தி, இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, சூரி, பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, மைனா நந்தினி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் அதிதி இயக்குனர் சங்கர் அவர்களின் இளைய மகள் ஆவார். இது இவருக்கு முதல் படம் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பாக மதுரை வீரன் என்ற பாடலும் கஞ்சா பூ கண்ணால என்ற பாடலும் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட பாடலாக இருக்கிறது இதில் மதுர வீரன் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதியே பாடியிருக்கிறார் விதி குறும்புத்தனங்கள் நிறைந்த ஒரு கதாநாயகியாக இருக்கிறார் இவர் மேடைலயும் பேட்டிகளின் போதும் மிகக் குறும்புத்தனங்கள் செய்வது பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை அம்சமாக கொண்ட இந்த படத்தில் இவர் தாவணி சேலையில் வந்து நடனம் ஆடுவதும், தேன்மொழி கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியும், பார்க்கும் ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்து இழுத்து இருக்கிறார் அதிதி.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாடர்ன் உடை அணிந்து வந்து இருந்தார் அதிதி. படம் வெளியான 5வது நாளே வெற்றி கொண்டாட்டம் நடத்தி இருப்பதை பலரும் கலாய்த்து வந்தனர். படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி,அதிதி,சூர்யா,பிரகாஷ் ராஜ்,முத்தையா என படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த போட்டியில் நடிகை அதிதி அனைவரையும் தோற்கடித்து விட்டார்.இறுதியாக களம் இறங்கிய கார்த்தியுடனும் செம்மையாக போராடி குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிதியின் எனெர்ஜியை கண்டு வியந்து பார்த்து வருகின்றனர். Watch the below video..
Youtube Video Code Embed Credits: Cinema Vikatan