விக்கு சாரிடா.! உன்ன வேணும்னே Avoid பண்ணல.! விக்ரமனை கட்டி பிடித்து ADK வெளியிட்ட அழகிய வீடியோ

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் விக்ரமனை கட்டிப்பிடித்து ஏடிகே முத்தம் கொடுத்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக இருக்கிறது. ஏடிகே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போது விக்ரமனை புறக்கணித்து விட்டு சென்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வீடியோவை ஏடிகே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நேற்றுடன் 105 நாட்களை நிறைவடைந்து பைனலை கோலாகலமாக நடத்தி இருந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விக்ரமனுக்கு இரண்டாவது இடமே கிடைத்திருந்தது. பலரும் விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளராக ஆவார்கள் என்று எண்ணி இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அசீம் வெற்றியாளராக ஆக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்கு சாரிடா.! உன்ன வேணும்னே Avoid பண்ணல.! விக்ரமனை கட்டி பிடித்து ADK வெளியிட்ட அழகிய வீடியோ 1
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏடிகே மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதாவது ஏடிகே வெளியேறும் போது இத்தனை நாள் நண்பனாக இருந்த விக்ரமனை கட்டி தழுவ கூட இல்லை, அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் வெளியேறிவிட்டார் என்றும், வேண்டுமென்றே விக்ரமனை ஏடிகே புறக்கணித்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதில் அளித்து இருந்த ஏடிகே தான் அவ்வாறு வேண்டுமென்றே செய்யவில்லை தான் ஒரு கலவையான மனநிலையில் இருந்ததால் தான் அப்படி விக்ரமனிடம் சொல்லாமல் வெளியேறிவிட்டேன் என்று பல பேட்டிகளில் விளக்கம் அளித்து இருந்தார். இருந்தபோதிலும் விக்ரமன் ரசிகர்கள் ஏடிகேவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று பிக்பாஸில் இறுதிக்கட்டம் முடிவடைந்த நிலையில் கேரவனில் வைத்து ஏடிகே விக்ரமனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அதற்கு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். விக்ரமனுக்கு நான் கொடுக்கும் கட்டிப்புடி வைத்தியம், நான் வேண்டுமென்றே விக்ரமனை புறக்கணிக்கவில்லை, நான் ஒருபோதும் விக்கிரமனை அலட்சியப்படுத்தியதில்லை. அது தற்செயலாக நடந்தது. இல்லை என்றால் இவர் என் சகோதரன் போன்றவர். ஏதோ ஒரு டென்ஷனில் அன்றைக்கு வெளியேற்றிவிட்டேன் அவரிடம் சொல்லாமல் என்றும் அவர் பேசியிருக்கிறார். மேலும் விக்ரமனுக்கு முத்தம் கொடுத்து அவரது பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதை பார்த்த பலரும் ஏடிகேவின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

 

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்