“பரிதாபங்கள் productions” தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹீரோவாக களம் இறங்கிய கோபி சுதாகர்.!

பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் இருவரும் இணைந்து தற்போது ஒரு புதிய படம் ஒன்றில் ஹீரோக்களாக களமிறங்கி இருக்கின்றனர். அந்த படத்திற்க்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் youtube மூலம் பிரபலமாகி தற்போது வைரலாக பேசப்பட்டு வருபவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து ரசிக்கும் ஒவ்வொரு சிறு விஷயங்களையும் காமெடி வீடியோக்களாகவும் அதே சமயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இவர்கள் வீடியோக்களை வெளியிட்டு நம்மை சிரிக்க வைத்து வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆரம்பத்தில் வாய்ப்புகள் தேடி பல தொலைக்காட்சிகளை அணுகிய போது பல தொலைக்காட்சிகளால் இருவரும் அவமானப்படுத்தப்பட்டனர். ஆனால் இன்று திறமைக்கு இதெல்லாம் ஒரு தடையில்லை என்று நிரூபித்து காட்டி மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பரிதாபங்கள் productions" தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹீரோவாக களம் இறங்கிய கோபி சுதாகர்.! 1

விளம்பரம்

"பரிதாபங்கள் productions" தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹீரோவாக களம் இறங்கிய கோபி சுதாகர்.! 3

சிவகங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளனர். பின்னர் சென்னைக்கு வேலை தேடி சென்ற அவர்கள் சில தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தனர். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாகவும், மிமிக்கிரி செய்யும் திறமை இருப்பதாலும் இருவரும் இணைந்து பிரபல தொலைக்காட்சியை அணுகினர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவருமே பயங்கரமாக அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் ஒரு youtube சேனலில் வேலை பார்த்து வந்தனர். அங்கிருந்து விலகிய இருவரும் தற்போது பரிதாபங்கள் என்கிற ஒரு சேனலை தொடங்கி அதை நடத்தி வருகின்றனர். தற்போது இருவரின் வீடியோ மிகப் பிரபலமாக இருக்கிறது. பரிதாபங்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிடும் வீடியோக்களை இலட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by WikkiTalks (@wikkitalks_official)

சமீப காலமாக மீம்ஸ் டெம்ப்லேட்டுகளாக வலம் வரும் இவர்களின் வசனங்களும் மிகப் பிரபலமாக இருக்கின்றன. என்னென்ன சொல்றான் பாருங்க, ஒரு வேல இருக்குமோ என்ற வசனங்கள் எல்லாம் மீம் டெம்ப்ளேட்டுகளில் உச்சபட்சத்தில் இருக்கின்றன. தொடர்ந்து இளைஞர்களின் வெற்றி நாயகர்களாக வலம் வரும் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து “பரிதாபங்கள் புரொடக்ஷன்” என்கிற பெயரில் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் படத்தை அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்து நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி இருக்கிறது. சின்னத்திரையில் இவர்களை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பியவர்கள் முகத்தில் கரியை பூசும் விதமாக இவர்கள் இன்று கடின உழைப்பால் உயர்ந்து நிற்கின்றனர். அவர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். Watch the below Video..! 

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  38 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான 'சந்திரலேகா' சீரியல் நடிகை ஸ்வேதா.! Cute Photoshoot.!

Youtube Video Embed Code Credits: Parithabangal Productions

விளம்பரம்

Leave a Comment