Categories: சினிமா

அயோ இந்த பாட்டு Toung ட்விஸ்ட்டர் மாதிரி இருக்கே..! கஷ்டப்பட்டு பாடலை பாடிய ஷக்தி ஸ்ரீ கோபாலன்..!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை காதலுக்காக அகநக என்ற பாடல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த பாடலை பாடுகிறார். அந்த வீடியோவை படக்குழுவே வெளியிட்டுள்ளது. மரர் கல்கி எழுதிய பிரம்மாண்ட நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், நடிகர் கார்த்திக், பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இந்த படம் உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோ இந்த பாட்டு Toung ட்விஸ்ட்டர் மாதிரி இருக்கே..! கஷ்டப்பட்டு பாடலை பாடிய ஷக்தி ஸ்ரீ கோபாலன்..! 1

 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசுகளின் வாழ்க்கை வரலாற்றை சில புனைவு கதாபாத்திரங்களுடன் மிகப் பெரிய நாவலாக படைத்திருந்தார் கல்கி. தமிழில் அமைந்த பிரம்மாண்டமான நாவலில் முதன்மையானதாக பொன்னியின் செல்வன் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் முதல் பாகத்தில் இருந்த பொன்னி நதி பார்க்கணுமே, அலைகடல் போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தில் இருந்து அப்டேட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

படத்தின் முதல் பாகம் வெளியான போது குந்தவை மற்றும் வந்தியத்தேவன் முதல் சந்திப்பின் போதே அக நக என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கும். எனவே அந்த பாடலின் முழு வடிவமாக இந்த பாட்டு வெளியானதால் பலரும் இந்த பாடலை விரும்பி கேட்கத் தொடங்கினர். நல்ல வரவேற்பை இந்த பாடல் பெற்று வருவதால் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் அக நக பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடுகிறார். அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்