Categories: உலகம்

மீண்டும் அமெரிக்கா தளம் மீது ஏவுகணை தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்பும்அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்தது. அதேபோல் தற்போது ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது பேராசை கொண்ட அமெரிக்கா அதனை அபகரிக்க பல்வேறு தசாப்தங்களில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் அமெரிக்கா தளம் மீது ஏவுகணை தாக்குதல் 1
ஈரானின் ஏவுகணை தாக்குதல்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்தால் கடும் கோபம் அடைந்த ஈரான், ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் சொன்னது.

இதன் பிறகு, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 180 பேர் உயிரிழந்தனர். இதனால் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போரை விரும்பவில்லை எனவும் பேர்ச்சுவார்த்தைக்கு தாயரெனவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அறிவித்திருந்தன.

இதற்கிடையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள ஈராக்கில் உள்ள பாலாட் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ராணுவம் ஏழு முறை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 4 வீரர்கள் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்