விக்ரம் படத்தில் டீனா என்ற கதாபாத்திரம் தற்போது மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படுகிறது. மக்கள் இவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். 30 ஆண்டுகளாக சினிமா துறையில் போராடி வந்த அவருக்கு தற்போது தான் வெளிச்சம் கிடைத்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஜூன் 3ம் தேதி வெளியானது விக்ரம் திரைப்படம். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருப்பார் லோகேஷ். குறிப்பாக க்ளைமாக்ஸ்-ல் சில நிமிடங்களே தோன்றினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது ரோலக்ஸ் தான். சூர்யா ரோலக்ஸாக வந்து நடிப்பில் அசத்தியிருப்பார். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சூர்யா பற்றிய பேச்சுதான் இருந்து வருகிறது. வீடியோ கீழே உள்ளது.

ஆனால் ஒரு சிறிய கதாபாத்திரத்திற்கு கூட இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கைத்தட்டல் வாங்கிய ரோல் தான் ஏஜெணட் டீனா. காளியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் கமலின் மருமகளுக்கு உதவியாக, வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணாக ஒரு பெண் நடித்திருப்பார். ஆனால் ரவுடி கும்பல் வீட்டின் கதவை உடைக்கும் போது அவர் ஒரு ஏஜெண்ட் என்பது தெரியவரும். இந்த சீனில் அவர் போனை பிடுங்கி ஏஜெண்ட் டீனா ஹியர் என்று கூறிவிட்டு ரவுடிகளை அடித்து துவைக்கும் காட்சி Goosebumps ஆக இருக்கும். கமல் வரும் வரை குழந்தைக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பார், இந்த காட்சிகள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
இந்த ரோலில் நடித்தவர் வசந்தி. இவர் குழு நடனம் ஆடுபவர். விஜய் நடித்த பகவதி, அஜீத் நடித்த வில்லன் போன்ற படங்களில் பின்னால் ஆடும் குழு நடனங்களில் ஆடியிருப்பார். மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலிலும் ஆடியுள்ளார் வசந்தி. அப்போது தான் அவரின் திறமையை பார்த்த லோகேஷ் அவரை காளியம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். 30 வருடமாக சினிமா துறையில் தான் இருந்தபோதிலும், டீனா கதாபாத்திரத்தில் தான் நடித்த போது எனக்கு கைத்தட்டிய போது தான் நெகிழ்ந்து போனதாக கண்ணீர் மல்க கூறினார் வசந்தி. தனக்கு இந்த படத்தின் மூலமாக ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாகவும் அவர் நெகிழ்சியுடன் கூறினார். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..
Video Embed Credits: Polimer News