தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகள் மேல் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலுள்ள முக்கிய நாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” படத்தின் மூலம் அங்கும் அறிமுகமாக உள்ளார். 35 வயதை தாண்டிய அவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்களின் காதல் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.9 ஆம் தேதியான நாளை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருப்பதியில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் 150 பேர் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி மறுத்தது.

இதனால் திருமணத்தை மகாபலிப்புரத்தில் நடத்த விக்கி நயன் ஜோடி முடிவு செய்தது.தங்களின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட 200 பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திருமணத்தை ஒளிபரப்ப ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்

இந்த திருமணத்தை இயக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தி இருந்த இந்த திருமண பதிவு வியாபார திட்டம் இப்பொது மெல்ல நம் ஊர் பக்கம் வந்துள்ளது. இங்கும் இதனை ஆரம்பித்து நடிகர் நடிகைகள் பணம் பார்க்க முடிவு செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற பாலிவுட் காதல் ஜோடியான ரன்பிர் கபூர் – அலியா பட் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய கிட்டத்தட்ட 80 கோடி வரை பணம் கொடுத்து வாங்கியுள்ளது பிரபல ஒடிடி நிறுவனம்.

இதே பாணியை பின்பற்றி இப்பொது நயன்-விக்கி திருமணமும் நிகழ உள்ளது.இதனால் திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் அரங்கத்திற்குள் போட்டோ எடுக்கக்கூடாது. அரங்கத்திற்குள் செல்போனை கொண்ட வரக்கூடாது என கூறியுள்ளனர்.திருமணத்தை நேரலை செய்யும் உரிமையை பெற்றுள்ளதால், எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோ காட்சிகளோ வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம் நெட்டிஃபிளிக்ஸ் நிறுவனம். அதன் காரணமாகவே திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.