இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடிப்பின் மீது வந்த ஆர்வத்தால் நடிக்க வந்தவர் விஜய் ஆன்டனி. இவர் நடித்த நான். சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. தற்போது விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அக்னி சிறகுகள். அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் இயக்குனர் நவீன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது இந்த படம். இது ஆக்ஷன் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். அக்ஷரா ஹாசன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 1 நவம்பர் 2018 அன்று கமல்ஹாசன் வெளியிட்டார். டீசர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் தொடங்கும் என்றும் முதல் பாதி படப்பிடிப்பு கொல்கத்தாவில் படமாக்கப்படும் என்றும் மற்றொன்று ஐரோப்பாவில் படமாக்கப்படும் என்றும் பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். முதலில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷாலினி பாண்டே நடிக்க இருந்தார். பின்னர் ரன்வீர் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜெயேஷ்பாய் ஜோர்தாரின் படத்தில் நடிக இருப்பதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். அதனால் அவருக்கு பதிலாக கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நியமிக்கப்பட்டார். 2020 ஜனவரியில் ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கஜகஸ்தான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. Youtube Video Code Embed Credits: Saregama Tamil
இப்பொது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு விஜய் ஆன்டனி நடிப்பில் ஒரு அதிரடி படம் வெளியாகியுள்ளதால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் தற்போது அதிரடி மட்டும் ஆக்ஷனில் புகுந்து விளையாடும் அருண் விஜய்யும் இணைந்துள்ளதால் படம் பெரும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் மாஸ் ஆக வெளியாகியுள்ளது அந்த டீசரை நீங்களும் காண.. Watch the teaser below..