ஊருக்கு உபதேசம் செய்யும் “வாரிசு”, தந்தை பிறந்தநாளில் வாழ்த்து கூட சொல்லவில்லை? கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள்

நடிகரின் விஜயின் தந்தை சந்திரசேகர் நேற்று தனது 81வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் பலரையும் நெகிழ செய்துள்ளது. யாருமே இல்லாமல் தனது மகன் விஜய் கூட இல்லாமல் தனது மனைவியுடன் தனியே அமர்ந்து அவர் கேக் வெட்டிய புகைப்படம் பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஏ சந்திரசேகரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற இயக்குனநராக ஒரு காலத்தில் இருந்தவர். இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். இவரின் மகன் பற்றி சொல்லவே தேவையில்லை. சந்திரசேகர் மகன் இவர் என்ற காலம் மாறிப்போய் இவரின் தந்தை சந்திரசேகர் என்ற நிலைமையாகிப் போனது. இளைய தளபதி அவர்களின் தந்தைதான் எஸ்ஏ சந்திரசேகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஊருக்கு உபதேசம் செய்யும் "வாரிசு", தந்தை பிறந்தநாளில் வாழ்த்து கூட சொல்லவில்லை? கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் 1

விளம்பரம்

இவர் 1978ம் ஆண்டு முதன் முதலில் “அவள் ஒரு பச்சைக் குழந்தை” என்ற படத்தின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
பிறகு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முண்ணனி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விஜயகாந்தை வைத்து 19 படங்களும், மகன் விஜயை வைத்து 9 படங்களும் இயக்கியுள்ளார். 80 வயதை நெருங்கிய போதிலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சமீபகாலமாக இவருக்கும் இவரது மகன் விஜய்க்கும் சண்டை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

தொடர்புடையவை  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "கலகத் தலைவன்" படத்தின் டீசர் வெளியானது.!

ஊருக்கு உபதேசம் செய்யும் "வாரிசு", தந்தை பிறந்தநாளில் வாழ்த்து கூட சொல்லவில்லை? கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் 3

விளம்பரம்

இவரும் விஜயும் 5 ஆண்டுகளாக பேசிக் கொள்ளவில்லை, விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு இருவரும் சரிவர பேசுவதில்லை என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் தற்போது சந்திரசேகர் நேற்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் அருகில் அவரது மனைவி மட்டுமே இருந்தார். யாருமே இல்லாமல் தனது மகன் விஜய் கூட இல்லாமல் தனது மனைவியுடன் தனியே அமர்ந்து அவர் கேக் வெட்டிய புகைப்படம் பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது. இதனால் விஜய் மீது பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குட்டி ஸ்டோரி என்ற பெயரில் தாய் தந்தையை கவனித்துக் கொள்ளுங்கள் என்று மேடை போட்டு பேசி வரும் விஜய் தனது சொந்த தந்தை பிறந்த நாளுக்கு கூட செல்லவில்லையா என்று தங்களது ஆதகங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊருக்கு உபதேசம் செய்யும் "வாரிசு", தந்தை பிறந்தநாளில் வாழ்த்து கூட சொல்லவில்லை? கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் 5

விளம்பரம்

அஜீத் ரசிகர்கள் சிலர், விஜய் பல நடிகைளின் பிறந்தநாளில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, நடிகைகளின் ‌பிறந்தநாளுக்கு நாக்கை தொங்கபோட்டு கேக் வெட்டும் நடிகர் ஜோசப் விஜய் தன்னுடைய தந்தை பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்த கூட மனமில்லை..தன் தாய் தந்தையை மதிக்காத நடிகன் ரசிகர்களுக்கு மட்டும் நல்லதையா கற்பிக்க போகிறார் என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

தொடர்புடையவை  மீண்டும் பெற்றோர்களான கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா தம்பதிகள்.! வெளியான புகைப்படங்கள்.!

ஊருக்கு உபதேசம் செய்யும் "வாரிசு", தந்தை பிறந்தநாளில் வாழ்த்து கூட சொல்லவில்லை? கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் 7

விளம்பரம்

இதற்கு விஜய் ரசிகர்கள், எஸ்ஏசி இது பற்றி பொது வெளியில் பேசினாரா? இல்லை என் மகன் என் பிறந்த நாளுக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டரா? அடுத்தவர் விஷயத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று கடுமையாக பதிலளித்து வருகின்றனர்.

ஊருக்கு உபதேசம் செய்யும் "வாரிசு", தந்தை பிறந்தநாளில் வாழ்த்து கூட சொல்லவில்லை? கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் 9

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment