காற்று மாசுபாடு காரணமாக மரணங்கள் மட்டுமின்றி, பிரசவ குறைபாடு, கருவுறுதல் குறைபாடு, பிறப்பு குறைபாடு போன்றவை ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 1,285 கர்ப்பிணிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் பத்து மைக்ரோ கிராம் நுண்துகள் மேல் காற்று மாசுபாடு இருந்தால் அது பிறக்கப் போகும் குழந்தைக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.
“பிரசவ எடையின் சராசரி மதிப்பீடு 72 கிராம் அதிகரிப்பு ஆகும்; அதாவது, கர்ப்பிணிகள் தூய்மையான பகுதியில் வசித்தால், பிறந்த குழந்தையின் பிரசவ எடையில் 70 முதல் 80 கிராம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்,” என சென்னை ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை தலைவர் (ஆராய்ச்சி) கல்பனா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கெல்லம் மாறாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காற்று மாசுக்கும் இறப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் மறுத்தார்; இது அரசின் 2018 ஆய்வுக்கு முரணான கருத்தாகும்.
ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள், ஒரு மாறுபட்ட, மிகவும் சிக்கலான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. “மோசமான காற்றின் தரம், மோசமான இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதற்கு கணிசமான பாடங்கள் உள்ளன” என்று யூனிஸ் கென்னடி ஸ்ரீவர் தேசிய குழந்தை சுகாதார மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ளார்ந்த மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி பிரிவின் தொற்றுநோயியல் கிளை மூத்த புலனாய்வாளர் பவுலின் மெண்டோலா தெரிவித்துள்ளார்.