பொன்னியின் செல்வன் படத்தை இன்று இரண்டாவது நாளாக பார்ப்பதற்காக ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் சென்னையில் உள்ள தியேட்டருக்கு வந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது் இந்த படத்தில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் கற்பனை என்றாலும், அதை மிக அழகாக வடிவமைத்து எழுதி இருப்பார் கல்கி. பொன்னியின் செல்வன் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி தான் இந்த கதை.

பாண்டிய மன்னனான வீரபாண்டியனை சோழ மன்னன் ஆதித்த கரிகாலன் தலையை வெட்டி கொன்று விடுவான். அந்த இடத்தில் ஆதித்த கரிகாலனுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக இருந்தது, சிறுவயதில் அவன் காதலித்து வந்த நந்தினி வீரபாண்டியனுக்கு காதலியாக அருகிலிருந்து சேவை செய்து கொண்டிருந்தது. வீரபாண்டியனின் தலையை எடுக்க சென்ற ஆதித்த கரிகாலன் காலில் விழுந்து நந்தினி உயிர்பிச்சை போடுமாறு கேட்பார். ஆனால் நந்தினியை தள்ளிவிட்டு, அதித்த கரிகாலன் வீரபாண்டியன் தலையை கொய்து அவனை கொல்வார். அதற்கு பலி வாங்கும் விதமாகத்தான் நந்தினி சோழர்களின் அரண்மனைக்குள் விஷப் பாம்பாக நுழைவார் அதற்கு அவர் பெரிய பழுவேட்டரையரை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வார்.
கிழவரான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு சோழ அரண்மனைக்குள் புகும் நந்தினி சோழர்களைப் பழி வாங்கினாரா? அந்த அரண்மனையில் வீரபாண்டியனின் வாரிசான அமரபுஜந்த பாண்டியனை அரியணை ஏற்றுவாரா என்பது குறித்த கதை தான் இந்த படம். இதில் நந்தினி கதாபாத்திரத்தில் அப்படியே ஐஸ்வர்யா ராய் தத்துரூபமாக நடித்திருந்தார். கதையில் வருவது போல அழகிலும், வஞ்சகம் செய்வதிலும் சற்றும் குறையாத கதாபாத்திரமாக ஐஸ்வர்யாராய் நடித்திருப்பார். இரண்டாவது நாளான இன்று திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் என அனைவரும் படம் பார்க்க வந்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா ராயும் தனது மகளுடன் படம் பார்க்க வந்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Kolly infos