Categories: சினிமா

உங்கள் முகம் எப்போதும் தவறான கோணத்தில் இருக்காது.! ஐஸ்வர்யா போட்ட ட்வீட்

வெளியிட்டது

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கு ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சினிமா துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கையில் இருந்த காசை எடுத்துக் கொண்டு, ரயிலில் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார். வீட்டிற்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்ததாக அவரே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். அப்படி கையில் காசு இல்லாமல் இருந்தபோதிலும் தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஸ்டுடியோவாக ஏறி இறங்கி வேலை கேட்டு வந்தார். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை பின்னர் 1975 ஆம் ஆண்டில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ரஜினிகாந்தை அபூர்வராகங்கள் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த படத்திற்கு பின்னர் அவர் தொட்ட ஒவ்வொரு படங்களும் வெற்றி படங்களாகவே அவருக்கு அமைந்தது.

உங்கள் முகம் எப்போதும் தவறான கோணத்தில் இருக்காது.! ஐஸ்வர்யா போட்ட ட்வீட் 1

தனது திறமைக்கு முதன்முதலாக அங்கீகாரம் கொடுத்து, தான் இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணமாக இருந்த பாலச்சந்திரன் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொண்டார் ரஜினி, அன்று தொடங்கி இன்று வரை 168 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவர் அடுத்தபடியாக 169 படத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார். 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அவர் 47 வருடங்களாக திரை துறையில் பயணித்து வருகிறார். குணச்சித்திர வேடங்கள் வில்லன் வேடங்கள், ஹீரோ என பல வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய முடியை ஸ்டைலாக கோதும் அழகை பார்ப்பதற்கே பல ரசிகர்கள் உண்டு. அவர்களும் ரஜினிகாந்த் போலவே தங்களது சிகையை அலங்காரம் செய்து கொண்டு வலம் வந்த காலங்களும் உண்டு.

அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. முதல் மகள் ஐஸ்வர்யா. அவருக்கு தனுஷுடன் திருமணமாகி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரஜினி வீட்டில் அமர்ந்து மொபைல் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ஃபில்டர் தேவையில்லை. இது ஒரு குறையில்லாத புகைப்படம்.இந்த frameல் எந்த குறையும் இல்லை. எந்த கோணத்தில் பார்த்தாலும் தவறாக தெரியாத ஒரு முகம். எல்லா நாட்களிலும் இப்படியே இருங்கள் அப்பா என்று தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்