Categories: சினிமா

வெள்ளிக்கிழமை அதுவுமா அம்மன் கோவில்ல இப்படி நடக்குதுனா அது தற்செயல் இல்ல.! நெகிழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!

வெளியிட்டது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று லால் சலாம் படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கியிருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் பழமையான மாரியம்மன் கோவிலில் இருந்து இந்த படப் பிடிப்புகள் தொடங்கி இருப்பதாகவும், இது தற்செயலாக நடந்தது இல்லை என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகளாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் ஏற்கனவே தனது கணவரை வைத்து 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோரை வைத்து லால் சலாம் என்கிற படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த்தும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்க இருக்கிறார்.

வெள்ளிக்கிழமை அதுவுமா அம்மன் கோவில்ல இப்படி நடக்குதுனா அது தற்செயல் இல்ல.! நெகிழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! 1
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் முதல் தோற்ற போஸ்டர் உடன் படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிகர் ரஜினிகாந்த், சுபாஸ்கரன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். பூஜை தொடங்கிய சில மாதங்கள் ஆகியும் கடைப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் படத்திருந்து காஸ்ட்யூம் டிசைனராக இருந்த ஐஸ்வர்யாவின் நண்பர் ஒருவர் திடீரென விலகுவதாக அறிவித்திருந்தார். தனக்கும் படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். படம் தொடங்குவதற்கு முன்பே விலகல்கள் நடந்தது. தொடர்ந்து விஷ்ணு விஷாலும் இந்த படத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல்களில் உண்மை இல்லை, விஷ்ணு விஷால் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.


இந்த நிலையில் இன்று படப் பிடிப்புக்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. இந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்தே தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்து நெகிழ்ந்து போயிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோவிலில் இன்று இந்த சூட்டிங் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அதுவுமாக அம்மன் கோவிலில் இந்த ஷூட்டிங் நடைபெறுவது தற்செயலாக இருக்கலாம், இல்லையென்றால் நாம் விரும்பும் கடவுள் அதன் பிள்ளையுடன் மறைமுகமாக பேசும் இனிமையான தருணமாகவும் இருக்கலாம் என்று ஐஸ்வர்யா நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த்தும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கியிருந்த 3 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், லால் சலாம் படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்