பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான “பிக்கிலி” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நாக்கா மூக்கா பாடல் போல இதுவும் வித்தியாசமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து பின்னாளில் நடிகராக மாறியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்கிற படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விஜய் ஆண்டனி கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், கொலை, ரத்தம், காக்கி, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்து கொண்டிருந்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டு தாடை பற்கள் அனைத்தும் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தான் மிகவும் குணமடைந்து விட்டதாகவும், தாடை மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டன என்றும் மீண்டும் பிச்சைக்காரன் 2 படத்திற்கு திரும்பி இருப்பதாகவும் சமீபத்தில் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடத்து வரும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் ஸ்னீக் பீக்காக வெளியாகும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த அவர் “பணம் உலகை காலி பண்ணி விடும்” என்று தமிழ் இங்கிலீஷ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பதிவிட்டு இருந்தார். மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி இருந்தது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலாக பிக்கிலி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பு விஜய் ஆண்டனி பேசுகிறார், அதில், “ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி தன்னிடம் இருக்கும் பண பலத்தால் அவர்களின் வயிற்றில் அடித்து பிழைக்கும் சில பணக்காரர்களுக்கு தான் வைத்துள்ள கெட்ட பெயர் ‘பிக்கிலி’ என்று விளக்கம் அளித்து பாடலை தொடங்குகிறார்”. ரோட்டில் குழந்தைகளுடனும் ஏழைகளுடனும் நடனமாடியும் இருக்கிறார். மேலும் நாக்க முக்கா பாடல் போல இந்தப் பாடலும் வித்தியாசமான முறையில் இருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் அந்த பாடலை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil