“டேய் ஐயப்பன் ராமசாமி நீ என் கைல கிடைச்ச உன் மூஞ்சி முகரை எல்லாம்”..! செம்ம கடுப்பான TTF வாசன்.!

ஐயப்பன் ராமசாமிக்கு எதிராக தற்போது இணையத்தில் பல மீம்ஸ்கள் பறந்து வரும் நிலையில் டிடிஎஃப் வாசனும் தன் பங்கிற்கு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மிகவும் கோபமாக “நீ மட்டும் என் கையில் கிடைத்தால் உன் மூஞ்சி முகரை எல்லாம் உடைத்து விடுவேன்” என்று பேசியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரு செய்தி என்றால் அது பல யூடியூபர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியினரிடம் காசு வாங்கிக்கொண்டு சிலருக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள் என்று வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது. மதன் ரவிச்சந்திரன் என்கிற பத்திரிக்கையாளர் முன்னெடுப்பில் இது போன்ற செயல்கள் மறைமுகமாக கேமராவில் பதிவாக்கப்பட்டு தற்போது வீடியோக்களாக வெளியாகி வருகிறது. அதில் பல youtube சேனல்களை சேர்ந்த தொகுப்பாளர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டும், பார்களில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டும் இலவசமாக பரிசு பொருட்களை பெற்றுக் கொண்டும் இருக்கின்றனர் இந்த வீடியோக்கள் வெளியான பின்பு பலரும் அந்த ஆங்கர்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"டேய் ஐயப்பன் ராமசாமி நீ என் கைல கிடைச்ச உன் மூஞ்சி முகரை எல்லாம்"..! செம்ம கடுப்பான TTF வாசன்.! 1
அதில் குறிப்பிடத் தகுந்த நபராக இருப்பவர் ஐயப்பன் ராமசாமி. இவர் வளர்ந்து வரும் பத்திரிகையாளர்களில் ஒருவராக இருக்கிறார். தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவராக இருந்து வந்தார். மேலும் பல சர்ச்சையான நபர்களை பேட்டி எடுத்து அவர்களை கிடிக்குபிடி கேள்விகளால் மடக்கியும் இருந்தார். இதனால் ஐயப்பன் ராமசாமிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இவர் சமீபத்தில் டிடிஎஃப் வாசனையும் நேர்காணல் செய்திருந்தார். அப்போது டிடிஎஃப் இடம் பல கிடுக்கப்படியான கேள்விகளை கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் டிடிஎஃப் வாசன் எழுந்து வெளிநடப்பு செய்திருந்தார். அந்த வீடியோ வெளியான பிறகு பலரும் டிடிஎஃப் வாசனை ட்ரோல் செய்தும் கலாய்த்தும் பதிவிட்டு வந்தனர். பதில் சொல்ல முடியாமல் ஓடுகிறாயா? என்று வாசனை மிகவும் கேலி செய்து மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  'ஈரமான ரோஜாவே 2' சீரியல் கேபியின் 24வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.!

"டேய் ஐயப்பன் ராமசாமி நீ என் கைல கிடைச்ச உன் மூஞ்சி முகரை எல்லாம்"..! செம்ம கடுப்பான TTF வாசன்.! 3

இந்த நிலையில் ஐயப்பன் ராமசாமியின் புது வீடியோ வெளியாகி இருப்பதால், கடுப்பான டிடிஎஃப் வாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இன்ஸ்டாகிராமில் உன்னை பின் தொடரும் பெண்களை சாப்பிட்டு விடுவாயாமே? என்றும், உன்னை எல்லாம் மரியாதை குடுக்கவே தகுதி இல்லாத ஆள், நீ மட்டும் என் கையில் கிடைத்தால் உன் மூஞ்சி முகரை எல்லாம் உடைத்து விடுவேன், அன்றைக்கு போட்டிருந்த அதே சட்டையை தற்போதும் போட்டு இருக்கிறேன் என்று மிக கோபமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Twin Throttlers

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment