ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகளாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் ஏற்கனவே தனது கணவரை வைத்து 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோரை வைத்து லால் சலாம் என்கிற படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த்தும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்க இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் முதல் தோற்ற போஸ்டர் உடன் படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிகர் ரஜினிகாந்த், சுபாஸ்கரன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். பூஜை தொடங்கிய சில மாதங்கள் ஆகியும் கடைப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் படத்திருந்து காஸ்ட்யூம் டிசைனராக இருந்த ஐஸ்வர்யாவின் நண்பர் ஒருவர் திடீரென விலகுவதாக அறிவித்திருந்தார். தனக்கும் படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். படம் தொடங்குவதற்கு முன்பே விலகல்கள் நடந்தது. தொடர்ந்து விஷ்ணு விஷாலும் இந்த படத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல்களில் உண்மை இல்லை, விஷ்ணு விஷால் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷை பிரிந்த நிலையில் தற்போது அவர் தனது மகன்களுடன் போயஸ் கார்டனில் உள்ள தனது தந்தை ரஜினிகாந்த் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் அதில் தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை என்று அவர் புகார் ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில் தனது வீட்டில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை, எங்கள் வீட்டில் பணிபுரிந்த ஆண் மற்றும் பெண் பணியாளர் இருவர் மீது சந்தேகமாக இருக்கிறது, விரைந்து அந்த நகைகளை கண்டுபிடித்து தருமாறு அவர் புகார் அளித்திருக்கிறார். மேலும் தனது தங்கையின் திருமணத்திற்கு பின்னர் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று முறை வீடுகள் மாறிய பிறகும் அந்த நகைகள் எடுக்கப்படவே இல்லை தற்போது நகைகள் மாயமாகி இருப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Polimer News