கணவர் பிறந்தநாளுக்காக Mid Night பார்ட்டி வைத்து வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த நக்ஷத்ரா.!

தனது கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக மிட் நைட் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் நக்ஷத்திரா. அந்த வீடியோவிய அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நட்சத்திரா. ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலமாக பிரபலமானார். இவர் முதலில் கிடா பூசாரி மகுடி என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் படங்களில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போன பின்பு சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது யாரடி நீ மோகினி தான். இந்த நாடகத்தில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து, பல இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கிராமத்து பெண்ணாக எதார்த்தமான நடிப்பும் அழகான முகபாவனைகளுடன் இவர் நடித்தார். இந்த நாடகத்தின் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நட்சத்திரா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவர் பிறந்தநாளுக்காக Mid Night பார்ட்டி வைத்து வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த நக்ஷத்ரா.! 1

விளம்பரம்

மீண்டும் அதே தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்கிற தொடரில் நடித்து வருகிறார். நட்சத்திராவிற்கும் அவரது காதலர் விஷ்வாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. விஷ்வாவும் திரைத்துறையைச் சேர்ந்தவர் தான். நாடகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் வைத்து வரவேற்பு நடத்தப்படும் என்று அறிவித்திருந்த இவர்கள், பின்னர் சில காரணங்களால் அந்த திட்டத்தை கைவிட்டனர். சிறுவயதில் தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்துள்ளார் நட்சத்திரா. தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் காரணத்தினால் நட்சத்திரத்திற்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அவசர அவசரமாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதை ஒரு வீடியோவாக வெளியிட்டு நட்சத்திராவே உறுதி செய்திருந்தார். குடும்பத்தினர் முன்னிலையில் மட்டும் திருமணம் நடைபெற்றது.

தொடர்புடையவை  எனக்கு நீதான் வேணும்.! வீட்டை விட்டு எழிலுடன் ஓடி வந்த அமிர்தா.! அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா.!

கணவர் பிறந்தநாளுக்காக Mid Night பார்ட்டி வைத்து வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த நக்ஷத்ரா.! 3

விளம்பரம்

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நட்சத்திரா, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார். சில நாட்களாகவே நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் தனது கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக மிட் நைட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் கணவருக்கு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment