“”கொல வெறி..” பாட்டு ‘3’ படத்துக்கு எந்த விதத்திலும் உதவி செய்யல”.! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிர்ச்சி தகவல்.!

‘3’ படத்தில் தனுஷ் பாடிய “ஒய் திஸ் கொலவெறி..” என்கிற பாடலால்தான் அந்த படம் வரவேற்பு பெறவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபில்தேவ் ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. மத நல்லிணக்கத்தை பேசும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தான் இயக்கிய ‘3’ படம் குறித்து அவர் பேசியிருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

""கொல வெறி.." பாட்டு '3' படத்துக்கு எந்த விதத்திலும் உதவி செய்யல".! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிர்ச்சி தகவல்.! 1
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணமாகி யாத்ரா மற்றும் லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதாக சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தனர். ஆனால் நீதிமன்றத்திற்கு சென்று அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வாங்கி பிரியாமல் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ‘லால் சலாம்’ படம் குறித்து பேட்டி அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ‘3’ படம் தோல்வி அடைந்ததாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறும் பொழுது “ஒய் திஸ் கொலவெறி..” பாடல் எப்படி ட்ரெண்ட் ஆனது என்று எங்களுக்கே தெரியவில்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  "அவனுக்கு அந்த பிரச்சனை மறுபடி மறுபடி வரும்"!!"தாலி கட்டிய நேரமே சரியில்ல"!! கவலைப்படும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா!!

""கொல வெறி.." பாட்டு '3' படத்துக்கு எந்த விதத்திலும் உதவி செய்யல".! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிர்ச்சி தகவல்.! 3
ஆனால் இந்தப் பாடல் படத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தது. படம் முழுவதையும் இந்தப் பாட்டு விழுங்கி விட்டது. அது தனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தப் பாட்டு படத்திற்கு உதவி செய்தது என்று கேட்டீர்கள் என்றால் கண்டிப்பாக செய்யவில்லை. இந்தப் பாட்டு படத்தையே Over Shadow செய்து விட்டது. ஆனால் நிறைய பேரு வாழ்க்கையில் இந்த பாடல் உதவி செய்திருந்தால் அது நல்லது தான்” என்று பேசி இருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா எதற்காக இப்படி பேசி இருக்கிறார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Rednool 

விளம்பரம்

Leave a Comment