எளிய பிண்ணனியில் இருந்து சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு வந்தவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கரில் பாடி தன் திறமை மூலம் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளார். இவர் பிரபல பிண்ணனி பாடகர் உதித் நாராயணன் அவர்களின் குரலை மிமிக்ரி செய்து அவர் போலவே பாடி அசத்துவார். பாட்டுத் துறையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் உதித் நாராயணன் போலவே பாடி மிமிக்ரி செய்து அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ஒரு முறை எஸ்பிபி அவர்களே அஜயின் திறமையை பார்த்து வியந்து போனார். நான் உதித்தை சந்திக்கும் போது உங்களை போல மிமிக்ரி செய்யும் ஒருவன் இருக்கிறான் என்று உதித்திடம் கூறுவேன் என்று எஸ்பிபி கூறினார்.எளிய பிண்ணனியில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை வெள்ளித்திரையில் பிண்ணனி பாடகர்களாக மாற்றியுள்ளது சூப்பர் சிங்கர். அந்த வகையில் அஜய்க்கும் நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. Youtube Video Code Embed Credits: Behindwoods TV

கடந்த வாரம் அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸ்ஸி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் மிக அழகாக உள்ளது. தற்போது ஜெஸ்ஸியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் திருமணத்திற்கு முன்பு கையில் மெஹந்தி போடும் பொது அஜய்யின் முகத்தை கையில் மருதாணியில் வரைந்துள்ளார் ஜெஸ்ஸி. கணவர் மீது இவ்வளவு பாசமா என்று அஜயின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video