வலிமை திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் இய்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத் குமார். ஏகே 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்குகள் ஹைதராபாத்தில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகியுள்ளன. அதில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாகவும், படத்தில் கல்லூரிப் பேராசிரியராகவும் அஜீத் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தல க்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் நடந்து வருவதாகவும், தீபாவளிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுளதாக தெரிகிறது. மேலும் ஒரு சஸ்பென்ஸ் என்னவென்றால் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், நெகட்டிவ் ரோல் அல்லது வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜீத் புதிய கெட்டப் போட்டுள்ளார். ஹேர் ஸ்டைலை மாற்றி செம்ம கெத்தாக மாறியுள்ளார் அஜீத்.
இவர் படப்பிடிப்புக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அங்கு புது கெட்டப்பில் இருந்த அவரை விமான நிலைய ஊழியர்கள் சூழ்ந்து கொள்ள அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடைசியாக வெளியான அஜீத்தின் சில படங்கள் சரியாக ஓட வில்லை. இதனால் ஏகே 61 படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இரட்டை வேடம், வில்லன் ரோலில் தல அஜீத்தை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் ரசிகர்கள் இந்த தகவலைக் கேட்டு மிகுந்த குஷியல் உள்ளனர்.