பிரான்ஸ் நாட்டில் 75வது திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர் ரகுமான், மாதவன், தமன்னா மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற கேன் சர்வதேச திரைப்பட திருவிழா பிரான்சில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இந்திய திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். விழாவின் நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றுள்ளார். இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த திரைப்பட விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள படமும், பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன. பா. ரஞ்சித்தின் அடுத்த படமான வேட்டும் திரைப்படத்தின் முன்னோட்டமும், கமல் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் முன்னோட்டமும் வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இயக்கியுள்ள “லீ மாஸ்க்” என்ற திரைப்படமும் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் தன்னுடைய 5 வருட கனவுத்திட்டம் என்றும், மிகுந்த ஆர்வமாக உள்ளதாகவும் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார். மேலும் இந்தியா கௌரவத்திற்கான நாடாக தேர்வாகியுள்ளது. Youtube Video Code Embed Credits: PuthiyaThalaimuari

இந்த பிரம்மாண்ட திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் இந்த மாத இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கான பணிகளில் படுபிஸியாக உள்ளதால் நயன்தாரா இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..