காலில் புண்ணு இருக்குனு பிச்சை எடுக்க மாட்டேன்.. அஜித்தை தாக்கி பேசினாரா கமல்.!

வெளியிட்டது

அஜீத் பற்றி கமலஹாசன் கூறியதாக ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருகிறது. இதனால் அஜித் மற்றும் கமலஹாசன் ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக மோதிக் கொண்டு வருகின்றனர். கமலஹாசனை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகனாக வளர்ந்து இருப்பவர் கமலஹாசன். இவர் 68 வயதை கடந்த போதும் நடிப்பின் மீது உள்ள தீராத காதலால் இன்று வரை நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 500 கோடி வசூலை நெருங்கி இருக்கும் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 180 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தமிழ் மட்டும் இன்றி இந்தியாவின் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பாடகர், நடன கலைஞர், சிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, படங்கள் தயாரிப்பது என பன்முகத்தன்மையாளராக விளங்குகிறார் கமலஹாசன். தற்போது இவரின் பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் கமலஹாசனை வறுத்து எடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, உடல் உழைப்பை கஷ்டம் எனக் கூறுவது தவறு. No Pain No Gain, உழைத்தால்தான் ஊதியம் கிடைக்கும் என்றெல்லாம் பேசி இருந்தார். மேலும் டான்ஸ் ஆடி முடித்த பிறகு எனக்கு கால் வலிக்கிறது, வியர்வை வந்தது, இடுப்பு வலித்தது என்றெல்லாம் தான் ஒருபோதும் ஆடியன்ஸிடம் சொல்லியது கிடையாது, ஆடியன்ஸ் பார்க்கும் போது என் கால் உடைந்து இருந்தாலும் டான்ஸ் நன்றாக ஆடுகிறேனா என்று கூற வேண்டும் அதுதான் முக்கியம் என்றும் பேசியிருந்தார். மேலும் தனது காலில் புண் இருக்கிறது என கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்கார்கள் போல் காசு வாங்க மாட்டேன், என் திறமையை காட்டித்தான் காசு வாங்குவேன் அவர் கோபமாக கூறியிருந்தார். இது அஜீத்தை தான் மறைமுகமாக தாக்கி பேசியிருந்ததாக அஜித் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

காலில் புண்ணு இருக்குனு பிச்சை எடுக்க மாட்டேன்.. அஜித்தை தாக்கி பேசினாரா கமல்.! 1

அஜீத் சண்டை காட்சிகளில் ஈடுபடும் போது காலில் காயம் ஏற்பட்டது. அது அப்போது வைரல் ஆனது. காலில் காயம் ஏற்பட்ட போதும் கூட அவர் சண்டை காட்சிகளில் நடித்தார் என்று அப்போது அஜீத் ரசிகர்கள் பேசி வந்தனர். அதைத்தான் மேற்கோள் காட்டி கமல் இவ்வாறு பேசியிருப்பதாக யாரோ கிளப்பிவிட தற்போது அஜீத் மற்றும் கமல் ரசிகர்களுக்கிடையே சண்டை முற்றியுள்ளது. ட்விட்டரில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர். அஜீத் முன்பு ஒரு பேட்டியில் கமல் 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருப்பதால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்று பேசி இருந்த வீடியோவை பகிர்ந்து இதுதான் அஜித்துக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் என்று அதை பகிர்ந்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்