எனக்கு மிகவும்பிடித்த ஒருவர்.! பிறந்தநாளில் கார்த்திக் தேவராஜ் வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் செய்த மான்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதில் பங்கேற்ற பலரும் பிண்ணனி பாடகர்களாக வலம் வருகின்றனர். சிலருக்கு டி.இமான் தன் படங்களில் பாடும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா, தனது குழுவில் பாடுவதற்கு பலருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது சீனியர், ஜீனியர் என்று எட்டு சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மறைந்த எஸ்பிபி, சின்னக்குயில் சித்ரா, எஸ்பிபி யின் மகன் சரண், சங்கர் மகாதேவன், கல்பனா போன்ற பலர் வெகு வருடங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான் இவர்கள் இருவரும் மிக காமெடியாக இந்த நிகழ்ச்சியை நடத்தி செல்வதால் இது இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்று சொல்லலாம். சூப்பர் சிங்கர் 8ன் ஜூனியர் இறுதி போட்டி சமீபத்தில் தான் முடிந்தது.

எனக்கு மிகவும்பிடித்த ஒருவர்.! பிறந்தநாளில் கார்த்திக் தேவராஜ் வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் செய்த மான்சி 1

விளம்பரம்

இந்தக் குழுவில் முக்கியமான நபராக கருதப்படுபவர் கார்த்திக் தேவராஜ். இவர் இந்த மியூசிக் குழுவில் பியோனா வாசிக்கிறார். சூப்பர் சிங்கருக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்த சுசிலா, ஜானகி, எஸ் பி பி போன்ற அனைவருமே இந்த நிகழ்ச்சியை குறித்து பேசும் போது முதலில் பாராட்டு தெரிவிப்பது ஆர்கெஸ்ட்ராவுக்கு தான். இது போன்ற பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ரா உடன் இணைந்து பாடுவதற்கு இந்த போட்டியாளர்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் எப்போதும் கூறுவது உண்டு. அதில் முக்கியமான நபராக பியோனா வாசிப்பவராக இருப்பவர் கார்த்திக் தேவராஜ். இளம் வயது நபராக இருக்கும் இவர், தனது திறமையால் பலரைக் கவர்ந்திருக்கிறார். சூப்பர் சிங்கரில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு நிகராக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரையும் சூப்பர் சிங்கர் 8 சீனியரில் கலந்து கொண்ட மான்சியை வைத்து பலரும் கலாய்த்து வருவதுண்டு.

தொடர்புடையவை  பிபி ஜோடிகளில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. சுஜா சிவகுமாருக்கு அடித்த ஜாக்பாட்

எனக்கு மிகவும்பிடித்த ஒருவர்.! பிறந்தநாளில் கார்த்திக் தேவராஜ் வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் செய்த மான்சி 1

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று கார்த்திக் தேவராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனது வீட்டில் கொண்டாடி இருக்கிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மானசியும் செய்யும் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒருவர், நேர்மறை ஆற்றல் கொண்ட ஒருவர்,்உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளை கேட்பதற்கும் உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பதற்கும் கடவுளுக்கு நான் மிக நன்றி கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு கடவுள் மென்மேலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் தருவாரா,க மீண்டும் ஒரு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். மேலும் கார்த்திக் வீட்டிற்கு மானசி செய்யும் ஆதித்யாவும் நேரில் சென்று அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment