Categories: சினிமா

விமான நிலையத்தில் ரசிகரை அழைத்து வெகு நேரமாக பேசி கொண்டிருந்த தல.! வைரல் வீடியோ.!

வெளியிட்டது

நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் நின்று பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சினிமா பற்றி எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியினால் மட்டுமே திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகர் அஜித்குமார். இவர் ஆரம்பத்தில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் இறங்கிய பிறகு அஜித்குமாருக்கு ரசிகர் பட்டாளம் பன்மடங்கு பெருகியது. இவரை இவருடைய ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைத்து வருகின்றனர். அஜித்திற்கு நடிப்பை தவிர துப்பாக்கிச் சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று பல திறமைகளை வைத்துள்ளார்.

விமான நிலையத்தில் ரசிகரை அழைத்து வெகு நேரமாக பேசி கொண்டிருந்த தல.! வைரல் வீடியோ.! 1

தற்போது அஜித் குமார் தனது 61வது படமான துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். மூன்று வருடங்களுக்குப் பின்பு காத்திருப்புக்கு பின்பு கடைசியாக வெளியான படம் தான் வலிமை. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதனால் வலிமை படத்தை இயக்கிய எச் வினோத் குழுவுடன் மீண்டும் இணைந்து ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது் இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பின்னர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

துணிவு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் அடிக்கடி சென்று வரும் அஜித்தை சுற்றி விமான நிலைய ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று அஜித் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. விமான நிலையத்தில் ரசிகர்களுடன் நின்று பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video.! 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்