திரைத்துறையில் இருக்கானால என் மகளுக்கு ப்ரெண்ட்ஸே இல்லை.. கண்கலங்கி அழுத அர்ச்சனா

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அறிமுகமாகினார். இவருக்கு பல ரசிகர்கள் அப்போது உருவாகினர். அன்று தொடங்கி இன்று வரை பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்ற மகளும் உண்டு. அவரும் அர்ச்சனாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தனது தாயுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார் சாரா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

திரைத்துறையில் இருக்கானால என் மகளுக்கு ப்ரெண்ட்ஸே இல்லை.. கண்கலங்கி அழுத அர்ச்சனா 1

விளம்பரம்

 

சாரா தனது வயதிற்கு மீறி அதிகமாக பேசுகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் அர்ச்சனா மற்றும் சாராவையும் திட்டி தீர்த்து வந்தனர். இதற்கு பலமுறை விளக்கம் அளித்து இருந்தார் அர்ச்சனா. பின்பு சாராவும் அர்ச்சனாவும் இணைந்து தங்கள் வீட்டு பாத்ரூமை ‘பாத்ரூம் டூர்’ என்ற பெயரில் வீடியோ எடுத்து தங்கள் youtube பக்கத்தில் பதிவிட, அது மேலும் சர்ச்சையானது. பலரும் இருவரையும் திட்டி தீர்க்க ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அர்ச்சனா ஜீ தமிழில் இருந்து விலகி, விஜய் டிவியில் சில காலம் பணியாற்றினார். பிக்பாஸ் நிகழ்சிக்காக ஜீ தமிழ. டிவியில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் விஜய் டிவியிலிருந்து விலகி, ஜீ தமிழில் சூப்பர் மாம் சீசன் 3 தொகுத்து வழங்குவதற்காக சென்று இருக்கிறார் அர்ச்சனா.

விளம்பரம்
தொடர்புடையவை  Once a Lion always a Lion..! முன்பதிவில் சாதனை படைக்கும் வேட்டையன்..!

திரைத்துறையில் இருக்கானால என் மகளுக்கு ப்ரெண்ட்ஸே இல்லை.. கண்கலங்கி அழுத அர்ச்சனா 3

 

விளம்பரம்

தற்போதும் தனது மகள் சாராவுடன் இணைந்து அவர் சூப்பர்மாம் சீசன் 3 யை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியின் போது சாராவும் அர்ச்சனாவும் கண்கலங்கி பேசியிருக்கின்றனர். திரை துறையில் இருப்பதால் சாராவிற்கு யாருமே நண்பர்கள் கிடையாதாம், அது குறித்து பேசும்போது அவர் கண் கலங்கினார். எனக்கு எல்லாமே என் அம்மா தான். என் அம்மா தான் என்னுடைய சிறந்த நண்பர். நான் கலங்கி அழும்போது, என் அம்மா தோள்களில் தான் சாய்ந்து அழுவேன், என்று கண் கலங்கி கூறினார். இதை பார்த்த அர்ச்சனாவும் கண்கலங்கினார். திரைத்துறையில் இருப்பதாலேயே நண்பர்கள் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய வலி என்று எனக்கு தெரியும் என்று கூறி அவரும் கண்கலங்கி அழுதார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment