உச்சநடிகராக இந்திய சினிமாவில் இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உலகம் முழுவதும் உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை பெற்று இருந்தது. தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது இப்படம் வருகிற அக்டொபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது படத்தின் ட்ரைலருக்காக காத்து உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் பல இடங்களில் முன்பதிவு தற்போதே ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இதுவரை முன்பதிவில் மட்டும் ரூ.5கோடி வசூலை இப்படம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.