லண்டன்ல கடையில் உள்ள CCTV காட்சிகள் உங்களுக்கு எப்படி கிடைச்சது? அஜித்தை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் அஜீத் குமார். ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக நடித்துக் கொண்டிருந்த இவர் பின்னாளில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அஜீத் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி விடுவது வழக்கம். சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு வெளியான வலிமை படம் பல எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்தபடியாக வலிமை படத்தை இயக்கிய எச்.வினோத்துடன் சேர்ந்து ஏகே 61ல் நடித்து வருகிறார். இறுதி கட்ட படபிடிப்புகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜீத்தைப் பொறுத்தவரை ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கூட வருவதில்லை என்பதுதான். 68 வயதிலும் கமல் தனது படத்தின் புரோமஷனுக்காக எவ்வளவு முயற்சி செய்கிறார் ஆனால் அஜீத் அவ்வாறு செய்வதில்லை என்று ரசிகர்களே மனம் குமுறி வந்தனர்.

லண்டன்ல கடையில் உள்ள CCTV காட்சிகள் உங்களுக்கு எப்படி கிடைச்சது? அஜித்தை மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 1

தனது படத்தின் ப்ரோமஷன் மட்டுமில்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் கூட வெளியாவது அரிதான நிகழ்வாக இருக்கும். ஆனால் சில மாதங்களாக அஜீத்தின் சில புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அஜீத் படபிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் செல்வது, கடைகளுக்கு செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் கூட வெளியாகி வந்தது. நேற்று கூட அவர் ஒரு கடையில் ஏதோ வாங்கிவிட்டு கடைக்காரருடன் பேசிக் கொண்டிருந்த வீடியோ வெளியாக வைரலானது. இந்த நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஜீத் தனது பெர்சனல் அசிஸ்டன்ட்களை வைத்து இப்படி வீண் விளம்பரம் தேடிக் கொண்டுள்ளார் என்று கலாய்த்து வருகின்றனர்.

சமீபத்தில் அஜீத் ஒரு காருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அதை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் தனது படத்தின் ஆடியோ வெளியீடு, ப்ரோமஷனுக்கு கூட வர மாட்டார் ஆனால் 365 நாளும் அவரது புகைப்படத்தை நாம் பார்க்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது அவருக்கே தெரியாமல்/அனுமதி இல்லாம போட்டோ எடுத்து போட்டு இருக்காங்க நம்புங்கண்ணே நம்புங்க என்று அஜீத்தை கலாய்த்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான சிசிடிவி காட்சிகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதில் கடை ஒன்றுக்குள் இருக்கும் அஜீத் கடைக்காரருடன் சிரித்து பேசுகிறார், பின்னர் ஒரு சீட்டில் எழுதுகிறார், பின்னர் பின்னால் வரும் ஒரு பெண்ணுக்கு வணக்கம் வைத்துவிட்டு நகர்கிறார். இந்த சிசிடிவி காட்சிகளை அஜீத் ரசிகர்கள், அஜீ்த்தின் குணத்தைப் பாருங்கள் என்று பகிர்ந்தனர்.

இந்த வீடியோ பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சிசிடிவி எப்படி எச்.டி கேமிராவில் எடுத்த மாதிரி இருக்கு என்றும், இவரே சிசிடிவி காட்சிகளை வாங்கி ரிலீஸ் செய்வார் போல என்றும், லண்டனில் உள்ள ஒரு கடையின் சிசிடிவி காட்சிகள் எல்லாம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது, கடைக்காரனிடம் பேசி முன்கூட்டியே வாங்கி விடுவார்களா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். பப்ளிசிட்டி பிடிக்காது என்று சொல்லும் அஜீத் தனது பெர்சனல் அசிஸ்டன்ட்களை வைத்து இது போல வீடியோ மற்றும் போட்டக்களை வெளியிட்டு வருகின்றார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்