அப்பா இறந்த பிறகு என் படிப்பை விட்டுட்டு தம்பி தங்கச்சி படிப்புக்காக கொத்தனார் வேலைக்கு போனேன்

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவை அதுவும் 2ஜி வேக நெட்டை வைத்துக் கொண்டு வாட்சப், பேஸ்புக் மட்டுமே பார்ப்போம். ஆனால் ஜியோ வந்த பிறகு நிலைமையே தலைகீழாக மாற்றிவிட்டது. டிக்டாக்கில் வந்த பலரும் டிக்டாக் ஆப்பை மூடிவிட்ட பிறகு, யூடியூப்பில் தலைகாட்டத் தொடங்கினர். யூடியூப்பில் ஒரு சேனலைத் தொடங்கி பல கன்டென்டுகளை கொடுத்து பணமும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். சிலர் அதீத பேச்சாலும் ஆபாச வார்த்தைகள் பேசியதாலும் ஜெயிலில் சிலர் கம்பி எண்ணிக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால் அந்த யூடிப்பில் தன்னை தாழ்த்திக் கொண்டு வீடியோ வெளியிட்டு இன்று பல லட்சங்கள் சம்பாதித்து உள்ள பலரை காண முடிகிறது. அதில் ஒருவர்தான் காத்து கருப்பு கலை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பா இறந்த பிறகு என் படிப்பை விட்டுட்டு தம்பி தங்கச்சி படிப்புக்காக கொத்தனார் வேலைக்கு போனேன் 1

விளம்பரம்

25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர். சில பைத்தியக்கரத்தனமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். குரலை மாற்றி கரகரவென வைத்துக் கொண்டு பாடி வீடியோக்கள் வெளியிடுவார். பொது இடங்களில் பிணம் போன்று வேடமணிந்து டீ கேட்பது, மக்கள் அதிகம் உள்ள இடங்களில் திடீரென ஆடுவது போன்ற வீடியோக்களை வெளியிடுவார். இதனால் இவரை பைத்தியக்காரன் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத காத்து கருப்பு கலை தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு தற்போது கியா ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது வாழ்வில் சந்தித்த பல்வேறு சோதனைகளை பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடையவை  உங்க வீட்ல யாராவது இப்படி இருந்தா உருவக்கேலி பண்ணுவீங்களா? செம்ம கடுப்பான மஹாலக்ஷ்மி

அப்பா இறந்த பிறகு என் படிப்பை விட்டுட்டு தம்பி தங்கச்சி படிப்புக்காக கொத்தனார் வேலைக்கு போனேன் 3

விளம்பரம்

தனது தந்தை இறந்த பிறகு அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் படிப்பதை நிறுத்திவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று தனது தம்பி தங்கைகளை படிக்க வைத்தேன் என்றும் கூறினார். காலை வேலை முடித்து இரவு பல கச்சேரிகளில் சென்று பாட வாய்ப்பு தேடி அலைந்து இருப்பதாகவும் கூறினார். பலர் செய்யும் கமெண்டுகள் தன்னை மிகவும் காயப்படுத்துவதாகவும் அழுதார். தற்போது அவர் இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Newsglitz

விளம்பரம்

Leave a Comment