சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் மூத்த முன்னணி நடிகர். சினிமா போட்டிகளை தாண்டி இவர் மீது அனைத்து ரசிகர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் அதிகம். தமிழ் சினிமாவை பல உயரங்களுக்கு தூக்கி சென்றுள்ள இவர் அண்மை காலமாக உடல்நல குறைவால் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதை தவிர்த்து கொண்டு, குறிப்பிட்ட சில படங்களை தேர்ந்துடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் சிவா இயக்கிய “அண்ணாத்தே” என்ற படம் வெளியாகி இருந்தது.

படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும், ரஜினி என்ற ஒரே ஸ்டார் இமேஜ் படத்தை 200 கோடிக்கு மேல் வசூல் செய்ய வைத்தது. 70 வயதை கடந்தும் இன்றும் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார். அடுத்து இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவர் அண்மைக்காலங்களில் பல நல்ல படங்களையும், நன்றாக நடிக்கும் நடிகர்களையும் நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படம், இன்று வெளியாகியுள்ள கமலின் “விக்ரம்” போன்ற படங்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்தது மட்டுமின்றி அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நடிகர் அஜித்தும், ரஜினியும் ரஜினிகாந்த் வீட்டில் சந்தித்து பேசியது போல ஒரு போட்டோ இப்பொது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது உண்மையா? பொய்யா? என்று தெரியாத நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை வேகமாக பரப்பி வருகிறார்கள்.

நடிகர் அஜித் ரஜினிக்கு அடுத்த படியாக தமிழ் திரையுலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவருடைய படங்களுக்கு ப்ரோமோஷன் இல்லாமல் மிக பெரிய அளவில் ஒப்பனிங் பெறுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 200 வசூலை தாண்டி கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பொது பரபரப்பாகி வரும் இந்த புகைப்படத்திற்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அது ஒரு பொய்யான புகைப்படம், அஜித் ரஜினிகாந்தை நேரில் சந்திக்கவில்லை, இதை யாரும் நம்ப வேண்டாம் என கூறி புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உண்மையில் அது அஜித்தும் ஒரு ரசிகரும் எடுத்துக்கொண்ட போட்டோ. அதே போல நடிகர் ரஜினியும் கமழும் இப்பொது சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இரண்டையும் ஒன்றைக்க யாரோ ஒரு சமூகவலைத்தளவாதி செய்த்துள்ள சித்து விளையாட்டு இது.
