Categories: சினிமா

அஜீத் காட்சியை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்!!

வெளியிட்டது
அஜீத் காட்சியை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்!! 1

கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கி வெளியான அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக அஜித்துடன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அவர்களது மகளாக அனிகா இருப்பார்.

படத்தில் அனிகாவை ஒரு கூட்டம் கடத்தி செல்வது போல காட்சி அமைக்க பட்டிருக்கும். அதை செல்போன் மூலம் தனது தாய் நயன்தாராவிடம் அனிகா தகவல் தெரிவிப்பார். அதிர்ச்சியடைந்த நயன்தாரா அந்த தகவலை அஜீத்திடம் கூறி தனது மகளை காப்பாற்ற சொல்வார். அவர் விரைந்து சென்று அடித்து தும்சம் செய்து மகளை காப்பாற்றுவார்.

இந்த படத்தில் இடம்பெற்ற காட்சியை தேனி மாவட்டத்தில் போலீசார் வலைதளங்களில் வெளியிட்டு போலீசாரின் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்தான நிலையில் போலீஸ் உதவியை உடனடியாக பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதை பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்