தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் படம் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் காணப்படும் என்பது அனைவரும் அறிந்தது. அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் இவர். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கப்பூர் தயாரிப்பில்

வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். கடந்த இரண்டு வருடங்களாக தல அஜித்தின் எந்த படமும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி செம்ம ஹிட் ஆனது. இதை தொடர்ந்து தல அஜித் ரசிகர்கள் டீசர் மற்றும் படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தல அஜித்தை பற்றி மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் பொது தல அஜித்துக்கு 55 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் , ஆனால் ஷூட்டிங் நாட்கள் அதிகமானதால் தற்போது தல அஜித் தன் சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி விட்டார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தி அதிகாரபூர்வ செய்தியா என்று தெரியவில்லை.