Categories: சினிமா

நீண்ட நாட்களுக்கு பின் வெளியான அஜித்தின் மகன் ஆத்விக் புகைப்படம்.! நல்லா வளந்துட்டாரே.!

வெளியிட்டது

அஜீத் அவர்களின் மகன் ஆத்விக்கின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. நன்றாக வளர்ந்து தற்போது அவர் அவரது தந்தை அஜித் போலவே மாறி இருக்கிறார். சென்னை எப் சி டி ஷர்டில் அவரது தாய் ஷாலினியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. தமிழ் திரை உலகில் க்யூட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் எது செய்தாலும் அது வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. தல அஜித் குமார் படங்களில் நடிப்பது, பைக் ரைடு செல்வது, சாகசங்கள் செய்வது என்று பிஸியாக இருந்து வருகிறார். இந்த பிஸியான நேரத்திலும் அவர் அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார். சமீபத்தில் instagram கணக்கை தொடங்கிய ஷாலினி, தனது கணவருடன் வெளிநாடு சென்று வரும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பின் வெளியான அஜித்தின் மகன் ஆத்விக் புகைப்படம்.! நல்லா வளந்துட்டாரே.! 1

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த பின்னர், தற்போது அவர் ஏகே 62 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனது 62வது படத்தில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் பல குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்க்கு பதிலாக தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த நிலையில் ஷூட்டிங்கில் இருந்து சிறிது இடைவெளி எடுத்திருக்கும் தல அஜித் குமார் சமீபத்தில் லண்டனுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் தனது விடுமுறை காலத்தை கழித்து வருகிறார். அங்கு இருந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித் மகன் ஆதிவிக்கின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் ஐஎஸ்எல் கால் பந்து போட்டிகள் இன்று நடைபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போலவே ஐஎஸ் ல் லீக் என்கிற கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது . சென்னையின் எப்சி என்கிற அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தல தோனி ஆகியோர்களுக்கு சொந்தமானது இந்த அணி. சென்னையின் பெயரை கொண்டுள்ளதால் இதற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த போட்டிகளை பார்ப்பதற்காக தற்போது தன் மகன் ஆத்விக்கை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் ஷாலினி. சென்னையின் எப் சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் என்கிற இரண்டு அணிகள் இன்று மோத இருக்கின்றன. அந்த போட்டியை பார்ப்பதற்காக வந்த ஷாலினி மற்றும் அஜித் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆத்விக் சென்னையின் எப்சி டி-ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்