“தீ தளபதி” பாடலுக்கு ஜானி மாஸ்டருடன் வெறித்தனமாக பிராக்டிஸ் செய்யும் தளபதி..! இதோ வீடியோ.!

தளபதி விஜய் வாரிசு படத்தில் வரும் “தீ தளபதி” பாடலுக்காக பிராக்டிஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படமாக இருந்தது வாரிசு திரைப்படம். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகி இருந்தது. தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாசுரடு என்றும் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்க, வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. படம் வெளியாகி முதல் நாளே 17 கோடி வசூலை பெற்று இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த படம் அஜித்தின் துணிவுபடுத்துடன் நேரடியாக மோத இருக்கிறது என்று தகவல் வெளியான நாள் தொடங்கி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"தீ தளபதி" பாடலுக்கு ஜானி மாஸ்டருடன் வெறித்தனமாக பிராக்டிஸ் செய்யும் தளபதி..! இதோ வீடியோ.! 1
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தனர். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதமே பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாத நபர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இணையதளங்கள் எங்கிலும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர் விஜய் ரசிகர்கள். பின்னர் வெளியான தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடைசியாக ட்ரெய்லர் வீடியோ வெளியான போது, யாரும் படைக்க முடியாத சாதனையாக ஒரே நாளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வாரிசு ட்ரைலர் சாதனை படைத்திருந்தது. படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 11 நாட்களில் சுமார் 250 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  தசாவதாரம் 2-ல் நடிக்க உள்ளாரா கமல்? கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பு | Dasavatharam

"தீ தளபதி" பாடலுக்கு ஜானி மாஸ்டருடன் வெறித்தனமாக பிராக்டிஸ் செய்யும் தளபதி..! இதோ வீடியோ.! 3
இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் “தீ தளபதி” பாடலுக்கு ஜானி மாஸ்டருடன் இணைந்து தளபதி டான்ஸ் ரிகர்சல் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கருப்பு கோர்ட்டுடன் ஜானி மாஸ்டர் போலவே நடனமாடி ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார் தளபதி. இந்த வீடியோவை தளபதியின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment