தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது. இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் இவருக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று சொன்னால் மிகையாகாது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நீண்ட வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது.

மேலும் டப்பிங் பணிகளும் முடிந்து படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன் , த்ரிஷா, ரெஜினா , ஆரவ் என பலரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர்.
தற்போது இப்படத்தை நடிகர் அஜித் முழுமையாக பார்த்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பார்த்த அஜித், இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டி உள்ளாராம். படம் தன்னை இம்ப்ரெஸ் செய்து விட்டதாகவும் , ஹாலிவுட் தரத்திலும் படம் வந்து இருப்பதாக நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டி உள்ளார்.