தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. கோடிகளில் வசூல் செய்யும் இவர் படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர் காத்து இருக்கின்றனர். தற்போது புதிய கட்சியை தொடங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

இவர் தற்போது கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை காண அவரின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்தில் இவருடன்பிரஷாந்த், பிரபு தேவா , மோகன் , சினேகா மீனாட்சி என பலரும் நடித்து உள்ளனர்.

இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவிக்க உள்ளதாக கூறி இருந்தார். ஆனால் அதற்கு தாமதமாகும் என்பதால் தற்போது படத்தில் இருக்கும் எல்லோரும் அடங்கிய புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.
I promised a Trailer launch date today. We are still working on bringing the best version to you ❤️🤗 So here is a small treat for Waiting to see our #Thalapathy on screen very soon #ThalapathyFansForever ❤️#GOAT pic.twitter.com/HhY5Dn2u5u
— Archana Kalpathi (@archanakalpathi) August 14, 2024