வெளிநாட்டில் இருந்து திரும்பிய உடனேயே தன் மகன் கால்பந்து விளையாடும் அழகை பார்ப்பதற்காக தல அஜித் கால்பந்தாட்ட மைதானத்திற்கு வந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது ஷாலினியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அஜீத்தின் இளையமகன் ஆத்விக் சில நாட்களுக்கு முன்பு ஷாலினியுடன் சென்று கால்பந்தாட்ட போட்டியை காண்பதற்காக மைதானத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று அப்பா அஜித் மற்றும் அம்மா ஷாலினி உடன் இணைந்து கால்பந்தாட்டம் மைதானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகராக இருப்பவர்தல அஜீத்குமார். தற்போது ஏகே 62 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். திரைத்துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் சுமார் 61 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இந்த படம், சுமார் 300 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருப்பதாக தெரிகிறது.

தற்போது அஜித்குமார் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது 62வது படத்தில் நடிக்க இருக்கிறார். முதலில் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் ஏகே 62 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் அஜித்குமார். அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்று தெரிகிறது. பிசியான சூட்டிங்களுக்கு மத்தியில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, பைக்கில் சாகசம் செய்வது என்று பிசியாக இருந்து வருகிறார் தல அஜித் குமார். இந்த புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகிறது. ஷூட்டிங் தொடங்குவதில் தாதமதம் என்றாலோ அல்லது ஷூட்டிங்க்கு இடையே சிறிது இடைவெளி கிடைத்தாலோ தனது சொந்த விஷயங்களுக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார் அஜித்குமார். குறிப்பாக குடும்பத்தினருடனும் நேரத்தை அடிக்கடி செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஊரில் இருந்து திரும்பி இருக்கும் அஜித் தனது மகனின் கால்பந்து ஆர்வத்தை பார்ப்பதற்காக மைதானத்திற்கு சென்றுள்ளார்.
சென்னையில் சில நாட்களாக கால்பந்து போட்டிகள் நடந்து வந்தது. இதைக் காண தனது தாயாருடன் அடிக்கடி சென்று வந்தார் அஜித் மகன் ஆத்விக். தற்போது ஊரிலிருந்து திரும்பிய அஜித் நேராக தனது மகனுடன் சென்று அவர் கால்பந்து விளையாடுவதை பார்த்து ரசித்திருக்கிறார். மைதானத்தில் இருந்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்தை ஷாலினியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சிறுவயதிலேயே கால்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் மகன் ஆத்விக், தற்போது கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரை இத்தனை நாட்களாக அவரது தாயார் ஷாலினி தான் அழைத்துச் சென்று வருகிறார். அடிக்கடி கால்பந்தாட்ட உடையுடன் ஆத்விக்கின் புகைப்படம் வெளியாகி வந்துள்ள நிலையில், தற்போது முதல்முறையாக தனது தந்தையுடன் அவர் கால்பந்தாட்டம் மைதானத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.!