முடிவுக்கு வந்தது மௌனராகம் தொடர்.! இன்று ஒளிபரப்பாக உள்ள கடைசி எபிசோட்.! சுபம் போட்டு முடித்த டீம்.!

மௌன ராகம் சீரியலின் கடைசி எபிசோடு இன்றைக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இணைந்து இந்த நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது. சுபம் போட்டு இந்த நாடகத்தை முடித்து இருக்கின்றனர். இன்றைய எபிசோட் குறித்த முழு விபரங்களை பார்க்கலாம். சென்னையில் பிரபல பாடகராக இருப்பவர் கார்த்திக் கிருஷ்ணா. இவர் கச்சேரி ஒன்றிற்காக ஒரு ஊரிற்கு செல்லும் பொழுது அங்கு மல்லிகாவை சந்திக்கிறார். அவருடன் அவருக்கு காதல் ஏற்படவே அவரை அங்கு வைத்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு சாட்சியாக கார்த்தி கிருஷ்ணா – மல்லிகா தம்பதிகளுக்கு சக்தி பிறக்கிறார். ஆனால் ஒரு விபத்தில் மல்லிகா இறந்து விட்டதாக கார்த்திக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. இதனால் சென்னைக்கு வரும் அவர் காதம்பரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அங்கு ஒரு திருப்பம் என்னவென்றால் காதம்பரி கார்த்திக்கொ திருமணம் செய்து கொள்ளும்போது காதலருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஏற்கனவே அவர் கர்ப்பமாக இருப்பார். இந்த உண்மையை மறைத்து கார்த்திக்கை திருமணம் செய்து கொள்கிறார் காதம்பரி. இதனால் அவருக்கு பிறந்த குழந்தை கார்த்திக் உடைய குழந்தை தான் என இத்தனை நாள் ஏமாற்றி வருகிறார்.

தொடர்புடையவை  ரோஹிணியின் மகனை வீட்டிற்கு தூக்கி வந்த முத்து மீனா.! அதிர்ச்சியில் உறைந்து போன ரோஹிணி.!

முடிவுக்கு வந்தது மௌனராகம் தொடர்.! இன்று ஒளிபரப்பாக உள்ள கடைசி எபிசோட்.! சுபம் போட்டு முடித்த டீம்.! 1
ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வர ஸ்ருதிக்கு மட்டும் இந்த விஷயம் தெரியாமலே இருந்து வந்தது. காதம்பரியின் முன்னாள் காதலர் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அதை கார்த்திக்கிடம் ஏற்கனவே கொடுத்து வைத்திருப்பார். அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டை முதல் மனைவியின் அண்ணியான சொர்ணம் கண்டுபிடித்து அதை ஸ்ருதியிடம் கூறிவிடுகிறார். இதன் பின்னர் கதையில் திருப்புமுனை ஏற்படுகிறது. ஸ்ருதிக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருகிறது. வீட்டில் உள்ள அனைவருக்கும் தான் கார்த்திக் கிருஷ்ணாவிற்கு பிறந்த குழந்தை இல்லை என்பது தெரிந்தும் தன் மீது எந்தவித வேறுபாடும் காட்டாமல் இருந்து வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளும் ஸ்ருதி மனம் உடைந்து போகிறார். இந்த எபிசோடுகள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றைய எபிசோடில் மல்லிகா தான் இந்த வீட்டிற்கு உரிமையாளர், தான் இந்த வீட்டில் இருப்பது நியாயம் இல்லை என்று காதம்பரி வீட்டிலிருந்து கிளம்புகிறார். ஆனால் காதம்பரி தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும், தான் நடுவில் வந்தவர் நான்தான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று மல்லிகா கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  'அன்பால் நிறைந்த பிக்பாஸ் வீடு" இந்த வாரம் Freez டாஸ்க்.! கதறி அழுத போட்டியாளர்கள்.!

முடிவுக்கு வந்தது மௌனராகம் தொடர்.! இன்று ஒளிபரப்பாக உள்ள கடைசி எபிசோட்.! சுபம் போட்டு முடித்த டீம்.! 3

 

விளம்பரம்

ஆனால் கார்த்திக் கிருஷ்ணாவோ மல்லிகா இருக்கும்பொழுது நான் காதம்பரியை இரண்டாவதாக திருமணம் செய்தது தவறுதான். எனவே நான் தான் இந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கிறார். பிறகு இருவரையும் சமாதானம் செய்யும் கார்த்திக் கிருஷ்ணா இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்படி செய்து விடுகிறார். பின்னர் ஷாலினியிடம் பேசிக் கொண்டிருக்கும் தருணை பார்த்து ஸ்ருதி நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் தருண் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நீ சந்தோஷமாக இருப்பாயா? நான் உன்னிடம் முன்னமே என்ன கூறினேன்? நீ சந்தோஷமாக இருக்கும் விஷயத்தை தான் நான் செய்வேன் என்று கூறினேன் அல்லவா.? எனவே நாம் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ்வோம், நீ எப்பொழுது மனம் திருந்தினாயோ அப்போதே நான் உன்னை மன்னித்து விட்டேன். இன்றிலிருந்து நாம் புது வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று கூறுகிறார். இதனால் ஸ்ருதி தருணை கட்டிப்பிடித்து அழுகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள். இந்த அழகிய தருணத்தை பார்த்து இதை நாம் கொண்டாட வேண்டும் என்று தருணின் அப்பா மனோகர் கூறுகிறார்.

தொடர்புடையவை  செம்ம ட்விஸ்ட் வைத்த பாரதி.! அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் கண்ணம்மா.! வேற லெவல் ப்ரோமோ.!

முடிவுக்கு வந்தது மௌனராகம் தொடர்.! இன்று ஒளிபரப்பாக உள்ள கடைசி எபிசோட்.! சுபம் போட்டு முடித்த டீம்.! 5
அதன் பின்னர் சக்திக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருகிறது. எனவே அன்றைக்கு இதை கேட்டு கொண்டாடி விடுவோம் என்று வருண் கூற சக்தியின் பிறந்த நாளிற்கு வீட்டில் உள்ள அனைவரும் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். கேக்கை காதம்பரியிடம் சக்தி நீட்ட அதை வாங்கி சக்திக்கு ஊட்டி விடுகிறார் காதம்பரி. மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர் கேக் ஊட்டி விடுகிறார். பின்னர் காதம்பரியின் தாயார் ருக்மணி வருணிடம் ஒரு பாட்டு போடு நான் அனைவரும் ஆடுவோம் என்று சொல்ல வருணும் பாட்டு போடுகிறார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆடுகின்றனர். ஆனால் அத்தை சொர்ணம் மட்டும் சோகத்துடன் நின்று கொண்டிருக்கிறார். பின்னர் அனைவரும் ஒன்றாக வந்து போட்டோ எடுக்கும் பொழுது சொர்ணத்தை சிரியுங்கள் என்று சொல்ல சொர்ணமும் மனம் மாறி சிரித்து விடுகிறார். அத்துடன் சுபம் போட்டு இந்த நாடகத்தை முடித்து இருக்கின்றனர். இந்த நாடகம் முடிந்தது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தபோதிலும், மற்ற நாடகங்கள் போல் வழ வழவென இழுக்காமல் விரைந்து நாடகத்தை முடித்து விட்டீர்கள் என்று பலரும் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment