தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்கும் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர்தான் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறன்றனர். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. எனவே ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய படக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் அசர்பைஜான் என்கிற நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீப காலமாக உலக அளவில் பைக் ரைடு சென்று இருந்த அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஷூட்டிங்கிற்கு திரும்பியிருந்தார். இதை இந்த படத்தை தயாரிக்கும் ‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் அசர்பைஜானிலிருந்து அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் அஜித்தின் சிறு காணொளிகள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று ஒரு காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக வந்த அஜித்குமார் நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.
அதற்கு பாவனாவும், “அதெல்லாம் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை சார்” என்று அஜித்துக்கு பதிலளிக்கிறார்.
மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்குமார் சக நடிகர்களிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொள்கிறார் என்று பலரும் அஜித்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.