தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் பிரசாந்த். இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உண்டு. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்து பல பெண்களை ரசிகர்களாக கொண்டவர் இவர். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வந்த பிரசாந்த் சில ஆண்டுகளாகவே சினிமாவை விட்டு விலகி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் படங்களில் நடிப்பதை விட்டு விலகி விட்டார் நடிகர் பிரசாந்த். தற்போது இவர் அந்தகன் படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். இப்படம் உருவாகி பல நாட்கள் ஆகியும் படம் வெளியே வராமல் இருந்தது. இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர். தற்போது விஜயுடன் கோட் படத்தில் பிரசாந்த் நடித்து உள்ளார்.

மேலும் அடுத்த மாதம் 15ஆம் தேதி பிரசாந்தின் அந்தகன் படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு உள்ளார். இப்பாடலில் பிரசாந்த் ஆட்டத்தில் கலக்கி எடுத்து உள்ளார்.
Embed Video Credits : SONY MUSIC SOUTH